ஒரு உறுப்பினராக இருந்தது ஏழு உறுப்பினராக அதிகரித்ததில் மகிழ்ச்சியடைகிறோம்.

Afham Nizam
By Afham Nizam February 12, 2018 15:14

ஒரு உறுப்பினராக இருந்தது ஏழு உறுப்பினராக அதிகரித்ததில் மகிழ்ச்சியடைகிறோம்.

2018 நடந்து முடிந்த உள்ளூராட்சித் மன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தும் இறைவன் உதவியால் ஏழு உறுப்பினர்களை பெற்றுக்கொண்டுள்ளது. என வடமேல் மாகாணசபை உறுப்பினரும் குருநாகல் மாவட்ட ஸ்ரீ.ல.மு.கா பிரதான அமைப்பாளருமான றிஸ்வி ஜவ்ஹர்ஷா தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்.

 

 

குருநாகல் கொபேகெனெய் பிரதேசசபைக்கு உட்பட்ட பண்ணவ வட்டாரத்தை ஸ்ரீ.ல.மு.கா வெற்றி கொண்டுள்ளமை முக்கிய அம்சமாகும். மேலும் குளியாப்பிடிய நகரசபை, பிரதேசசபை, பொல்கஹவெல ஆகிய சபைகளிலும் உறுப்பினர்களை பெற்றுக்கொண்டுள்ளது.

 

 

மேலும் நிகவெரடிய, பன்னல, குருநாகல் மற்றும் பண்டுவஸ்நுவர சபைகளும் குறிப்பிடத்தக்கதாகும். புதிய தேர்தல் முறைமை மூலமாக தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவது தொடர்பாக மக்களுக்கு மத்தியில் தெளிவூட்டும் வகையில் எமது பிரச்சாரப்பணியை முன்னெடுத்து வந்ததில் நாம் வீண்போகவில்லை. அதேபோன்று ஐ.தே.க யினால் எமக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட படி எமக்கான போனஸ் ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்க்கான முயற்சிகளில் இன்ஷா அல்லாஹ்  தொடர்ந்தும் ஈடுபடுவோம்.

 

 

அதேபோன்று ஒரு சில ஆசனங்களை ஒரு சிறு வாக்கு வித்தியாசங்களில் எமக்கு இழப்பதற்க்கான சூழ்நிலை உருவாகியது. இருந்த போதிலும் சமூகத்திற்க்கான எமது அரசியல் பணி நின்று விடப்போவதில்லை. இன்ஷா அல்லாஹ் வெற்றி பெற்றவர்கள், தோல்வியுற்றவர்கள் என்று அல்லாமல் எமது அரசியல் பணியை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளோம்.

 

 

 

அத்துடன் கொபேகெனெய் மற்றும் பண்டுவஸ்நுவர ஆகிய பிரதேசசபைகளில் நாம் தீர்மானிக்கும் சக்தியாகவுள்ளமை இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய விடயமாகும் எமக்கு வாக்களித்த அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். என்றார்.

 

 

Afham Nizam
By Afham Nizam February 12, 2018 15:14
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*