உள்ளூராட்சி தேர்தலில் சிறுபான்மைக்கட்சிக்குள்ள வாய்ப்பு

farsan
By farsan January 23, 2018 14:01 Updated

உள்ளூராட்சி தேர்தலில் சிறுபான்மைக்கட்சிக்குள்ள வாய்ப்பு

இம்முறை உள்ளூராட்சிமன்ற தொடர்பில் வாக்காளர்களுக்கு ஒரு மயக்க நிலை நிலவுகின்றது போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் கூட வாக்காளர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் பொய்யான முறையில் விளக்கங்களை கொடுத்து வருவது அவதானிக்க முடிகிறது இந்த தேர்தல் முறையானது 60:40 எனும் வகையில் அமைந்துள்ளது. 60 விகிதமானவர்கள் போட்டியிட்டு வட்டாரங்களை வெற்றிபெறுவதன் மூலம் சபைக்கு தெரிவு செய்யப்படுவார்கள் மீதி 40 விகிதமானவர்கள் பட்டியலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள்,

உதாரணம் அனுராதபுர மாவட்டத்திலுள்ள திறப்பன பிரதேச சபையை எடுத்துக்கொள்வோம்.

திறப்பன பிரதேச சபை 10 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 10 வட்டாரங்களும் 60 விகிதத்திற்கு சமனாகும் எனவே

60: 10 எனின் 40 : 6 ஆகும் எனவே

10 வட்டாரங்களில் இருந்து முதல் 10 பேர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் ஏனைய 6 பேர்கள் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள்.

உதாரணமாக.

மொத்த வாக்குகள் -18,000 என வைத்துக்கொள்வோம்

சுமார் 75 விகிதமான வாக்குகள் அளிக்கப்பட்டால் 75/100*18000= 13,500 வாக்குகளே அளிக்கப்படும் வாக்குகள். இதில் சுமார் 100 வாக்குகள் செல்லுபடியற்றதாக எடுத்துக்கொண்டால்

13,400 செல்லுபடியான வாக்குகளின் மூலம் 16 உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டும். எனவே ஒரு உறுப்பினரை தெரிவு செய்ய 13,400/16 =837 வாக்குகள் தேவை

ஆக 837 வாக்குகளுக்கு மேலே பெற்ற அனைத்து கட்சிகளுக்கும் அவர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் ஆசனம் கிடைப்பது உறுதியாகின்றது.

உதாரமாக

UNP – 6,000 வாக்குகள் – 6000/837= 7 ஆசனங்கள் +141 எஞ்சிய வாக்குகள்.
SLP – 5,000 வாக்குகள் – 5000/837= 5 ஆசனங்கள் +818 எஞ்சிய வாக்குகள்
JVP – 1025 வாக்குகள் – 1025/837= 1 ஆசனம் + 183 எஞ்சிய வாக்குகள்
SLMC – 1000 வாக்குகள் – 1000/837= 1 ஆசனம் +163 எஞ்சிய வாக்குகள்
BBS – 375 வாக்குகள் ஒரு ஆசனத்தை பெறுவதற்கான குறைந்தளவான வாக்குகள் போதாது

மொத்த ஆசனங்கள் 16 வரவேண்டும் ஆனால் மேலே 14 மாத்திரமே வந்துள்ளது. எனவே ஏனைய இரண்டு ஆசனங்களும் எஞ்சியுள்ள வாக்குகளில் அதிக எண்ணிக்கையான எண்ணிக்கையுள்ள முதல் இரண்டு இடங்களுக்கு வழங்கப்படும்.

அப்படியென்றால் எஞ்சிய வாக்குகளில் முதலாம் இடத்தை UPFA (818) வாக்குகளை பெற்றமையினால் (1) ஆசனம் வழங்கப்படும்.
அவ்வாறே எஞ்சிய வாக்குகளில் இரண்டாம் இடத்தை BBS (375) வாக்குகளை பெற்றமையினால் (1) ஆசனம் வழங்கப்படும்.

இப்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு உள்ள சந்தர்ப்பங்களை பார்ப்போம்.

சந்தர்ப்பம் -1
============

வட்டாரத்தை வெற்றி பெறுதல் – இதன் மூலம் ஒரு ஆசனம் இலகுவில் வந்து விடும் எஞ்சிய வாக்குகளில் மூலம் இன்னொரு ஆசனத்தையும் பெற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்பும் உள்ளது.

சந்தர்ப்பம் -2
============

நாச்சியாதீவு வட்டாரம் UNP அல்லது UPFA ஆகிய ஏதாவது கட்சி வெற்றி பெற்றாலும் கணிசமான வாக்குகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெறும். ஒட்டுமொத்தமாக 10 வட்டாரங்களிலும் இருந்து பெற்றுக்கொள்ளும் வாக்குகள் அண்ணளவாக 850 ஆகின்ற போதும் எமக்கான ஒரு ஆசனம் உறுதியாகின்றது.

சந்தர்ப்பம் -3
=============

எஞ்சிய வாக்குகளினால் பெறப்படும் 1 அல்லது 2 ஆசனங்களில் குறைந்தது 400 வாக்குகளை பெற்றுக்கொள்ளும் போது சிறுபான்மை கட்சிக்கான பிரதிநித்தித்துவம் உறுதியாகின்றது

எனவே இம்முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் எதனையும் வெற்றிகொள்ளமால் இரண்டுக்கு மேற்பட்ட ஆசனங்களை அனுராதபுர மாவட்டத்தில் போட்டியிடுகின்ற எல்லா பிரதேசசபைகளிலும் பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஆசனங்கள் யாரையும் தோல்வியடைய வைத்தோ அல்லது குறுக்கு வழியிலோ அல்ல மாறாக தேர்தல் சட்ட விதிகளுக்கமையவே பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை பிரதேச சபைகளில் அதிகரிக்க ஒரே வழி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களிப்பதே. இது திறப்பனை பிரதேச சபைக்கு மட்டுமல்ல எல்லா பிரதேச சபைகளுக்கும் இதே நிபந்தனைகள் தான்.

எனவே நேர்மையாகவும் , சிந்தித்தும் வாக்களித்தால் அனுராதாபுரத்தில் பெரும் மாற்றம் நிகழும்..

Farween Nachchiyatheevu

 

farsan
By farsan January 23, 2018 14:01 Updated
Write a comment

1 Comment

  1. M.Saharin Ahamed January 23, 16:01

    Well explanation about the election method

    Reply to this comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*