அட்டுலுகம அல் – ஹஸ்ஸாலி மத்திய கல்லூரிக்கு விளையாட்டு மைதான அபிவிருத்தி

farsan
By farsan January 11, 2018 06:05

அட்டுலுகம அல் – ஹஸ்ஸாலி மத்திய கல்லூரிக்கு விளையாட்டு மைதான அபிவிருத்தி

அட்டுலுகம அல் – ஹஸ்ஸாலி மத்திய கல்லூரிக்கு நீண்டநாள் தேவையாக இருந்துவந்த விளையாட்டு மைதானத்தை அமைத்து தருமாறு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளரும், உயர்பீட உறுப்பினரும், அட்டுலுகம கிழக்கு வேட்பாளருமான நப்லி நசீர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வேண்டுகோளுக்கமைய, நகர திட்டமிடல் அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு என்பவற்றின் மூலம் 35 இலட்சம் ரூபா இந்த மைதானத்தின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், இன்று (10) குறித்த பிரதேசத்துக்கு சென்று மைதானத்தின் அபிவிருத்தி வேளைகளை பார்வையிட்டார்.

இதேவேளை பண்டாரகம பிரதேச சபையில், அட்டுலுகம கிழக்கு வட்டாரத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, யானைச் சின்னத்தில் போட்டியிடும் நப்லி நசீர் அவர்களை ஆதரித்து நேற்று  (10)  மக்கள் சந்திப்பும் இடம்பெற்றது.

farsan
By farsan January 11, 2018 06:05
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*