அக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை

farsan
By farsan January 10, 2018 06:12

அக்கரைப்பற்று மாநகர பட்டினப்பள்ளி வட்டாரம் மு.கா முன்னிலை

-ஜெஷ்பர்-
உள்ளூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டியம் தருணங்கள் மிக மிக அதிகம்.

அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தல் களமும் அதனுள் அடங்கப்போகிறதா ? என்கின்ற கேள்வி பலராலும் இப்போது எழுப்பப்படுகிறது.

வேட்பாளர் தெரிவு மற்றும் மக்கள் மனநிலை மாற்றம் என்பன நிரந்தர அபிவிருத்தி என்கின்ற இலக்கை நோக்கி பயணிக்கின்ற நிலை பெரிதும் அடையாளப்படுத்தப் படுகிறது.  இந்நிலையில் இரண்டு புதல்வர்களை களத்தில் இறக்கி சபையின் போட்டி நிலையை நிதர்சனமாக உணர்ந்துள்ள தேசிய காங்கிரஸ், மு.கா வின் வேட்பாளர்களின் முன்னிலையை தாண்டுவதில் பல சிரமங்களை எதிர் நோக்குகிறது.
அந்த வகையில் அக்கரைப்பற்று மாநகர வெற்றிக்  கள நிலவரத்தில் அக்கரைப்பற்று பட்டினப்பள்ளி வட்டாரம் மாநகரத்தின் திருப்புமுனை (terminal) என்பதில் எந்த சந்தேகமும் யாருக்கும் கிடையாது.
மக்களின் மனநிலை வெளிப்பாட்டு  கருத்துக்களின்  பிரகாரம் அக்கரைப்பற்றில்  மு.கா  வின்  தேர்தல்  கால  ஆதரவு  அதிகரித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பட்டினப்பள்ளி வட்டாரத்தில் மக்கள் சேவைக்கான குடும்பத்தில் இருந்து மீண்டெழுந்துள்ள  நௌபர்  காரியப்பர் (வபா) மீதான ஆதரவுத்தளம் மேலோங்கியுள்ளது. என்றும் ஒரே இயல்பாக பழகுவதும், மக்களுக்காக தன்னை தியாகம் செய்யுமளவுக்கு துணிச்சல் மிக்க தலைமைப் பண்பை கொண்டதுவுமான ஒருவராகவே இவர் கணிக்கப்படுகிறார். அத்துடன் மிக ஆழமான அரசியல் அனுபவம் இவரின் வட்டாரத்தின் மீதான கவர்ச்சியை அதிகரித்துள்ளது.
அதேவேளை PMGG கட்சியின் முக்கியஸ்த்தர்  சகோ. சிறாஜ் மஷூரும் இதே களத்தில் இருக்கின்ற நிலையில் முன்னாள் அமைச்சரின் மகனின் ஆதரவு வட்டம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. எப்படியாயினும் சகோ.தவத்தின் தலைமையில் பயணிக்கின்ற மு.கா அக்கரைப்பற்றின் உள்ளூராட்சி தேர்தலில் வரலாற்று மாற்றங்களை கொண்டு வரும் என்பதில் சந்தேகம் கிடையாது.
farsan
By farsan January 10, 2018 06:12
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*