கத்தார் வாழ் கல்முனை சாஹிரா கல்லூரி பழைய மாணவர்களின் வருடாந்த குளிர்கால ஒன்றுகூடல் !

farsan
By farsan December 28, 2017 09:37

கத்தார் வாழ் கல்முனை சாஹிரா கல்லூரி பழைய மாணவர்களின் வருடாந்த குளிர்கால ஒன்றுகூடல் !

  -Mohamed Ajwath-

 கத்தார் வாழ் கல்முனை சாஹிரா கல்லூரி பழைய மாணவர்களின் வருடாந்த குளிர்கால ஒன்று கூடல் கடந்த வியாழக்கிழமை (21st of December 2017) பிற்பகல் மூன்று மணி முதல் வெள்ளிக்கிழமை (22nd of December 2017) பிற்பகல் மூன்று மணி வரை கத்தாரில் உம் அபிரியாவில் (Umm Abirieh) அமைந்துள்ள அல் டியாபா  ரிசார்ட்டில் (Al Diafa Resourt) வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கத்தாரில் நாளா திசைகளிலும் பறந்து வாழும் கல்முனை சாஹிரா கல்லூரி பழைய  மாணவர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வானது முழுநாள் நிகழ்வாக நடைபெற்றதுடன் கத்தாரில் குடும்ப சகிதம் வசிக்கும் சகோதரர்களுக்கென விசேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தமையினால் பலர் குடும்ப சகிதம் இந்நிகழ்வில் கலந்து ஒன்றுகூடிஉரையாடிஉறவாடி உறவுகளையும்நட்புக்களையும் தங்களிடையே வளர்த்துக்கொண்டனர்.

கல்முனை சாஹிரா கல்லூரி பழைய மாணவர்களினால் மிகவும் முக்கியத்துவமிக்கதாக கருதப்பட்ட இவ்வொன்று கூடலானது கடல் கடந்து கத்தாரில் நாளாபுரங்களிலும் பறந்துவாழும் உள்ளங்களை ஒன்று சேர்த்த உறவுப்பாலமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட சகோதரர்களினால் இவ்வரிய  சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தியமைக்கு ஏற்பாட்டு குழுவினரை  வாழ்த்தி வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட பழைய மாணவர்கள் தங்களது பழைய பாடசாலை வாழ்க்கை நினைவுகளை நினைவுபடுத்தி தங்களிடையே மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர்.      

அறுபது வருட புராதணத்தையம் வரலாற்றையும் கொண்ட தேசியத்திக்கே எடுத்து காட்டாக திகழும் கல்முனை சாஹிரா கல்லூரியினது கத்தார் கிளையின் குளிர்கால ஒன்றுகூடலானது இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது. முதலாவது அமர்வு வியாழக்கிழமை (21st of December 2017) பிற்பகல் மூன்று மணியளவில் ஆரம்பிக்கப்பட்டதினை தொடர்ந்து பழைய மாணவர்களின் அறிமுக நிகழ்வுகடன் விவாதம் மற்றும் கருத்து முரண்பாடுகளின் போது எவ்வாறு அதனை திறம்பட முகம் கொடுப்பது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து நிகழ்வினை மெருகூட்டும் வகையில் தனி மற்றும் குழு நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன் பெட்மிண்டன் (Badminton) போன்ற பல உள்ளக விளையாட்டுக்கள் (Indoor events) மூலம் நிகழ்வு கலை கட்ட தொடங்கியது. பின்னர் வழங்கப்படட ஓய்வு நேரத்தினை தொடர்ந்து  இஷா தொழுகையுடன் இரவு நேர விருந்துபசாரம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து Zahirian Old  Boys Association – Qatar கிளையின் எதிர்வரும் ஆண்டிற்கான நிர்வாக தெரிவு நடைபெற்றது. தலைவர் (President), செயலாளர் (Secretory), மற்றும் பொருளாளர் (Treasurer) உட்பட 25 நிர்வாக சபை உறுப்பினர்கள் அவையில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதுடன் ஆலோசனை குழுவுக்கும் மேலதிக ஐந்து சிரேஷ்ட உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர் இத்துடன் முதலாம் கட்ட அமர்வு நிறைவடைந்தது.     

மறுநாள் காலை பஜிர் தொழுகையுடன் (Fajr prayer) இரண்டாம் அமர்வு ஆரம்பமானது. இவ்வமர்வின் முதற்கட்டமாக பாடசாலையில் காணப்படும் பிரச்சினைகள் பௌதீக வளகுறைபாடுகள் மற்றும் பாடசாலையினது தேவைப்பாடுகள் தொடர்பில் நிகழ்வில் கலந்து கொண்ட சகோதரர்கள் பலர் ஆக்கபூர்வமான கருத்துக்களை அவையில் உணர்வுபூர்வமாக முன்வைத்தனர். அதனை தொடர்ந்து  பாடசாலையினது  எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் இத்திட்டங்களுக்கு Zahirian Old  Boys Association – Qatar கிளையினால் எதிர்காலத்தில் எவ்வாறு உதவுதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைவாக கல்முனை சாஹிரா கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும்  மாணவர்களின் கல்வி வளர்ச்சியினை அதிகரிக்கும் நோக்கில் வசதி குறைந்த குடும்பத்தினை சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் பொருட்டு குறுகிய கால (Short term) மற்றும் நீண்ட கால (Long term) உதவி வழங்கும் திட்டங்கள் முன்மொழியப்பட்டு அவசரமாக நடைமுறைப்படுத்துவதற்கும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது  இதற்கு பொருத்தமான தேவையுடைய மாணவர்களினை தெரிவு செய்யும் பணியினை  உடனடியாக ஆரம்பிக்கும் படியும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் எதிர்வரும் காலங்களில்  கத்தார் வாழ் கல்முனை சாஹிரா கல்லூரி பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்று போட்டியொன்றினை நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கரப்பந்தாட்டம் (volleyball) மற்றும் நீச்சல் தடாக (swimming pool) விளையாட்டுக்களுடன் சிறுவர்களை கவரும் வகையில் சிறுவர்களுக்கான விசேட விளையாட்டுக்களும் நிகழ்வை அலங்கரித்தன.  பின்னர் ஜும்மா தொழுகையினை தொடர்ந்து பகல் உபசாரம் நடைபெற்றது. அத்துடன் இறுதி நிகழ்வாக புதிய அங்கத்தவர்களுக்கான Zahirian Old  Boys Association – Qatar கிளையின் விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்ட நிகழ்வினை தொடர்ந்து கத்தார் வாழ் கல்முனை சாஹிரா கல்லூரி பழைய  மாணவர்களின் வருடாந்த குளிர்கால ஒன்றுகூடல் – 2017 யினது நினைவாக புகைப்படமெடுக்கும் நிகழ்வுடன் “நினைத்து மகிழும் நீங்காத நினைவுகளுடன்” இவ்வொன்று கூடலானது இனிதே நிறைவடைந்தது.

farsan
By farsan December 28, 2017 09:37
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*