215 வருடங்களைப் பூர்த்தி செய்த அரசாங்க அச்சக திணைக்களம்

Rihmy Mohamed
By Rihmy Mohamed December 9, 2017 05:50

215 வருடங்களைப் பூர்த்தி செய்த அரசாங்க அச்சக திணைக்களம்

கஹட்டோவிட்ட ரிஹ்மி 

தற்போது சில புகையிரத சங்கங்கள் தமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. அதனால் இந்த நாட்களில் அரச ஊழியர்கள் பல இலட்சம் பேர் தமது வேலைத்தளங்களுக்குச் செல்வதில் இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர். இது போன்ற செயற்பாடுகளால் தமது கோரிக்கைகளை வென்றெடுக்கலாம் தான். ஆயினும் பல பேரை அவதிப்படுத்தி இவ்வாறு செய்வது தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆகாது” என்று அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் 215 ஆம் வருடப்பூர்த்தி மற்றும் நலன்புரி பிரிவின் 100வது வருடப் பூர்த்தியும் அண்மையில் திணைக்களத்தில் நடைபெற்ற போது, பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

1802 அந்நியர் ஆட்சியிலேயே ஆரம்பிக்கப்பட்ட அச்சுத் திணைக்களமானது, இன்று அரச பிரசுரிப்பின் பிரதான பங்காளராக திகழ்கிறது. இதனது 215 வருட வரலாற்றில் முதன்முறையாக வெளியீட்டு விற்பனை நிலையம் ஒன்று அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், “சிங்கப்பூர், மலேசியா என்பன அபிவிருத்தியடைந்தது நீதியான நடவடிக்கைகள் மூலமாகும். நாங்கள் ஜனநாயகத்துடன் பயணிக்கின்ற அதேவேளை வலுவான நடைமுறைகளை செயற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. நாம் அரசு என்ற வகையில் நாட்டு மக்களுக்கு பாரிய சுதந்திரத்தை வழங்கி இருக்கிறோம். உலகிலேயே சிறந்த தகவல் அறியும் சட்டங்களில் நாம் கொண்டு வந்த தகவல் அறியும் உரிமை இருக்கிறது. இதனால் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இலிருந்து தகவல் அறியும் உரிமை கிடைத்திருக்கிறது. அதனால் தான் அண்மையில் பிரதமர் சுயாதீன ஆணைக்குழு முன்னால் ஆஜராக வேண்டியேற்பட்டது.
எங்களுக்கு மக்கள் மீது பொறுப்பு உள்ளது. அதனால்தான் பிரதமர் வரலாற்றில் முதன்முறையாக அவ்வாறு செய்தார். இது போன்ற விடயங்கள் முன்பு நடந்திருந்தால் வெள்ளை வேன் கடத்தல், மரணங்கள் நிகழ்ந்திருக்கும். அந்தப் பயத்தை நாம் இல்லாமல் செய்தோம். ஒரு முக்கிய தேர்தல் முன்னால் வருகிறது. ஒன்றாக ஆட்சியில் உள்ள இரு பிரதான கட்சிகளும் இதில் பிரிந்து போட்டியிடுகிறோம். இது என்னுடைய வாழ்க்கையில் முக்கிய தேர்தலாகும். இவ்வாறு இரு கட்சிகளும் பிரிந்து கேட்பது பெரிய பிரச்சினைகளை உண்டு பண்ணும். வெற்றி / தோல்வி யார் அடைவார்கள் என்பதை விட இந்த நல்லாட்சி அரசாங்கத்தை 2020 வரை கொண்டு செல்வோம்.
நாம் பாரிய கடன்பட்டே அபிவிருத்திகளை செய்து வருகிறோம். எது எப்படியென்றாலும் மக்களுக்கு கஷ்டம் வராமல் அவர்களுக்கு அதிக பட்ச நலனை வழங்கும் வாறே நாம் ஆட்சியை நடாத்துகிறோம். இந்த நிலைமையில் அரச அச்சகத் திணைக்களத்தின் ஊழியர்களின் சேவை முன்பை விட வேகமாக எமக்குத் தேவை. அத்துடன் இதனை நவீன மயப்படுத்த அவசியமான நடவடிக்கைகளை நாங்கள் அமைச்சு மூலம் எடுப்போம்” என்றும் தெரிவித்தார். இந்நிகழ்விற்கு அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, திணைக்கத்தலைவி கங்காணி லியனகே உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
Rihmy Mohamed
By Rihmy Mohamed December 9, 2017 05:50
Write a comment

1 Comment

  1. Rose December 25, 03:39

    Good

    Reply to this comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*