கல்பிட்டி பிரதேசத்திற்கு ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் சுமார் 20கோடி 20 இலட்சம் ரூபாய்களை கொண்ட பாரிய அபிவிருத்திகள்

farsan
By farsan November 29, 2017 12:51

கல்பிட்டி பிரதேசத்திற்கு ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் சுமார் 20கோடி 20 இலட்சம் ரூபாய்களை கொண்ட பாரிய அபிவிருத்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் பிரதிநிதி எமது வடமேல் மாகாணசபை உறுப்பினர் கெளரவ S.H.M. நியாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும்,நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சருமான அல்
ஹாஜ் கெளரவ ரவுப்ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டிலும், மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும், சுகாதார பிரதி அமைச்சருமான கெளரவ பைசல் காசிம் அவர்களின் நிதியிலும் சுமார் 20கோடி 20இலட்சம் ரூபாய்கள் கல்பிட்டி பிரதேசத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதிகளுக்கான பணிகள் தற்போது மக்களின் தோழர் எனது மாகாணசபை உறுப்பினர் நியாஸ் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

முசல்பிட்டி கிராமத்திற்கு குடிநீர் திட்டத்திற்கு சுமார் 16கோடி ரூபாய் தொகையும், அத்தோடு முசல்பிட்டி கிராமத்திற்குரிய மருத்துவமையம் (Cliniccentre) இற்கு 1கோடி ரூபாய்தொகையும்,வீதி அபிவிருத்திற்கு 20 இலட்சம் ரூபாய்தொகை
அத்தோடு  கல்பிட்டிநகர பேருந்து நிலையத்திற்கு செல்லும் வீதிற்கு 1கோடி 40 இலட்சம் ரூபாய்களையும் மற்றும் ஏனைய நிதிகள்  அல் அக்ஸா பாடசாலை வீதிகளை காபட் இடுவதற்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டட வேளைகள் நடப்பதை பார்வையிடுவதற்காக எமது மாகாண சபை உறுப்பினர் நியாஸ் அவர்கள் சென்று இருந்தார். அவர்களுடன் கிராம முஸ்லிம்காங்கிரஸ் அமைப்பாளர்கள் போராளிகள் மற்றும் பணியில் ஈடுபடுவோர்களை கீழ் உள்ள படங்களில் காணலாம்.

குறிப்பு÷ ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்தி பணிகள் இவ் ஆண்டைபோலும்
அதற்கு மேல் பன்மடங்கு நிதிகளையும் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் தேசிய தலைவர் கெளரவ ரவுப் ஹக்கீம் அவர்கள் செய்துதர இருக்கிறார்
என்ற மகிழ்ச்சியான செய்தியை இவ் இடத்தில் அறியத்தருகிறோம்.

Media unite (Niyas mpc)

farsan
By farsan November 29, 2017 12:51
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*