முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கைக்குமான அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்ட நினைவு நாள் இன்று! – சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்

farsan
By farsan November 29, 2017 12:41

முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கைக்குமான அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்ட நினைவு நாள் இன்று! – சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்

முஸ்லிம் காங்கிரஸ் 1980ம் ஆண்டு காத்தான்குடியில் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் அதன் அரசியல் நடவடிக்கைகளில் மும்முரமாக கிழக்கிலங்கையை மையமாக வைத்துதான் சுமார் ஆறு ஆண்டுகளாக அது செயல்பட்டு வந்தது. இதன் பின்னர்தான் இதனை தலைநகர் கொழும்பில் வைத்து அகில இலங்கை ரீதியில் முழு நாட்டிற்கும் அறிமுகப்படுத்துவதற்கு அடையாளமாகவும் அதனை அரசியல் கட்சியாக பதிவதற்குமாகவேண்டி தனது ஆறாவது தேசிய மகாநாட்டில் 1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டது.

அன்நாளின் நினைவுநாள் இன்றைய தினத்தில்தான் என்பதை முதலில் நினைவூட்ட விரும்புகிறேன். ஏனெனில் இம் மகாநாட்டில்தான் கட்சியின் பொதுச் செயலாளராக நான் மீண்டும் ஏகமானதாக இரண்டாம் முறையும் தெரிவுசெய்யப்பட்ட அன்நாளை இன்றும் நான் நன்றியுடன் எமது மு.கா. வின் முன்னனி உறுப்பினர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் அபிமானிகள் அத்தனை பேருக்கும் ஆதாரபூர்வமாக ஆவணங்கள் மூலம் அதன் ஆரம்ப நாட்கள் பற்றிய குறிப்புக்களை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இக் கட்சியின் பொதுச்செயலாளராக (1980ஃ1986 முதல் 1988) வரையிலான வருடங்களில் வந்த முதல் மாகாண சபை தேர்தல் நடந்த காலப்பகுதியில் கடமைபுரிந்த அன்நாட்கள் இன்நாட்களைப் போன்று முகநூல் முகவர்களோ, கையடக்க தொலைபேசிகளோ, கொம்பியூட்டர் பதிவுகளோ, வட்சப்களோ, வைபர்களோ, அரசியல் வாகன வசதி வாய்ப்புகளோ, பட்டம் பதவிகளோ, பணிப்பாளர்களோ, இணைப்பாளர்களோ, உள்ளுராட்சி சபை உறுப்பினர்களோ போன்ற எந்த அந்தஸ்தும் அதிகாரங்களும் இல்லாமல்தான் கொடிகள் கட்டி, போஸ்டர்கள் ஒட்டி, கூட்டங்கள் கூட்டி, மேடைகள் போட்டு, குண்டர்களால் விரட்டியடிக்கப்பட்டு (என்)களின் புதிய லான்ஸர் (9ஸ்ரீ) சொந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு நாங்கள் எல்லாம் தாக்கப்பட்டு நஸ்டப்பட்டு, கஸ்டப்பட்டு எங்களால் கட்டி எழுப்பப்பட்டதுதான் இந்த “முஸ்லிம் காஸ்கிரஸ் கட்சி” என்பதனை எம்மவர்களில் எத்தனை பேர்தான் இவ்விடயங்கள் பற்றி எல்லாம் முற்றும் முழுதாக அறிந்திருப்பார்களோ நான் அறியேன்.

அத்துடன் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அப்போதைய சிந்தாமணிப் பத்திரிகை செய்தி படத்தில் அன்று எம்முடன் இருந்தவர்கள் எல்லோரும் இன்று மரணித்து மறைந்துவிட்டார்கள். இவர்களில் இருவரைத் தவிர அவர்களில் ஒருவர்தான் அடியேன் (எஸ். எம். ஏ. கபூர்) அடுத்தவர்தான் முன்னாள் ஆ.P. எம்.எம். சுஹைர் (Pஊ). என்பவைகளை எல்லாம் எமது அரசியல் அறிமுக அறிவாளகள்; அறிந்திருப்பார்களா? அல்ஹம்துலில்லாஹ்

 

farsan
By farsan November 29, 2017 12:41
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*