காலியின் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் விஜயம்

Afham Nizam
By Afham Nizam November 18, 2017 19:04

காலியின் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் விஜயம்

காலி, ஜிந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற அசம்பாவிதங்களைத் தொடர்ந்து அங்கு முஸ்லிம்கள் மத்தியில் பதற்றநிலை தோன்றியுள்ள சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சனிக்கிழமை (18) அங்கு நேரடி விஜயம் மேற்கொண்டார்.

 

அமைதியை நிலைநாட்டும் நோக்கில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சம்பவ இடத்துக்கு வருகைதந்த பொலிஸ்மா அதிபர் பூஜீத் ஜயசுந்தரவுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துரையாடினார். அத்துடன் பொலிஸ் அதிரடிப்படை கட்டளை தளபதி சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லத்தீப், பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா

அதிபர் பெர்ணான்டோ ஆகியோருடனும் அமைச்சர் ஹக்கீம் நிலைமையை ஆராய்ந்ததோடு ஆலோசனையும் தெரிவித்தர். ஞாயிற்றுக்கிழமை இரவுநேரங்களில் மீண்டும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என மக்களால அச்சம் தெரிவிக்கப்பட்டபோது, அது பற்றி பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் ஹக்கீம் அவ்வாறு சுட்டிக்காட்டியை அடுத்து விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதற்கு இடமளிக்காத வகையில் உடனடியாக தமது கவனத்துக்கும் ஏனைய பொலிஸ் உயரதிகாரிகளினதும் கவனத்திற்கும் கொண்டுவருவதற்கு உரிய ஏற்பாடுகளை உடனடியாக பொலிஸ்மா அதிபர் மேற்கொண்டார். எவ்வித விரும்பத்தகாத சம்பவங்களும் ஏற்படாதவகையில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

 

அத்துடன் தாக்குதலுக்கு உள்ளான பள்ளிவாசல் மற்றும் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவற்றை பார்வையிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஆறுதல் கூறியதோடு இதுதொடர்பில் உயர் மட்டத்தில்பேசி மேலதிக

 

நடவடிக்கைகளை முன்னெடுப்பது பற்றி நம்பிக்கை தெரிவித்தர்.

 

அரசியல் களம் சூடு பிடித்துள்ள சூல் நிலையில் சமூகங்களுக்கிடையில் நிலவும் நல்லிணக்கத்தையும், நல்லுறவையும் சீரழித்து வன்செயல்களை தூண்டிவிட்டு இவ்வாறான இனவாத செயல்பாடுகளினூடாக இலாபம்தேட முற்படும் தீய சக்திகளின் விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் ஹக்கீ்ம் வலியுறுத்துகிறார்.

 

உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக நிலைமையை கையாள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கிந்தோட்டையில் விதானகொட, வெலிப்பட்டிமோதர பிரதேசங்களுக்கும் மஹா ஹப்புகல, ஹுஸைன் ஜும்ஆ பள்ளிவாசலுக்கும் அமைச்சர் ஹக்கீம் சென்று நிலைமையை ஆராய்ந்ததோடு மக்களோடு கலந்துரையாடினார்.

 

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். அஸ்லம், முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர் ஹில்மி ஆகியோரும் அமைச்சருடன் அங்கு சென்றிருந்தனர்.

 • ஷபீக் ஹுஸைன்
 •  
Afham Nizam
By Afham Nizam November 18, 2017 19:04
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

Recent Comments

 • Afham Nizam

  Afham Nizam

  நன்றி

  View Article
 • Afham Nizam

  Afham Nizam

  நன்றி

  View Article
 • ஆவை முகம்அமது அன்சாரி

  ஆவை முகம்அமது அன்சாரி

  மாஷா.அல்லாஹ்! இந்திய திருநாட்டின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக். அதன் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் ex…

  View Article