காலியில் சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்கு இலக்கான முஸ்லிம் பிரதேசங்களில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் முயற்சியினால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Afham Nizam
By Afham Nizam November 17, 2017 20:45

காலியில் சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்கு இலக்கான முஸ்லிம் பிரதேசங்களில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் முயற்சியினால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று மாலை சிங்கள காடையர்களின் தாக்குதல் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டவுடன் அமை்சசர் ரவூப் ஹக்கீம், அப்பிரதேசத்திற்கு விசேட அதிரடிப்படையினரை அனுப்பி வைப்பதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

 

 

ஜனாதிபதி, பிரதமர், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல, பொலிஸ் மா அதிபர் ஆகியோரை தொடர்பு கொண்ட அமைச்சர் ஹக்கீம், கலவரத்தில் ஈடுபடும் காடையர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடுமாறு வலியுறுத்தியிருந்தார்.

 

இதனையடுத்து கொழும்பிலிருந்து அவசர கதியில் அப்பிரதேசத்துக்கு அனுப்பப்பட்ட விசேட அதிரடிப்படையினர் கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

 

கலவரம் நடைபெற்ற பிரதேசம் எங்கும் அதிரடிப்படையினர் பாதுகாப்பில் உள்ளனர். அத்துடன் கலவரம் செய்யும் நோக்கில் ஒன்று திரள முயலும் சிங்களக் காடையர்கள் மற்றும் பாதைகளில் வன்முறைத் தனமாக நடந்து கொள்ள முற்படுவோர் மீது நள்ளிரவு வேளையிலும் கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொள்ளபட்டு விரட்டியடிக்கப்படுகின்றனர்.

 

கிந்தோட்ட சந்தியில் உள்ள வீடுகள், கட்டடங்கள் சேதமாகி உள்ளது . தாக்குதலின் காரணமாக காரணமாக தாக்கப்பட்ட தக்கியாப் பள்ளிவாசலின் பல பகுதிகள் சேதமடைந்துள்ளன

 

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர்.

Afham Nizam
By Afham Nizam November 17, 2017 20:45
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

Recent Comments

 • Afham Nizam

  Afham Nizam

  நன்றி

  View Article
 • Afham Nizam

  Afham Nizam

  நன்றி

  View Article
 • ஆவை முகம்அமது அன்சாரி

  ஆவை முகம்அமது அன்சாரி

  மாஷா.அல்லாஹ்! இந்திய திருநாட்டின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக். அதன் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் ex…

  View Article