அட்டாளைச்சேனை ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்தில் O/L மாணவர்களுக்கான கருத்தரங்கு

Afham Nizam
By Afham Nizam November 14, 2017 14:39

அட்டாளைச்சேனை ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்தில் O/L மாணவர்களுக்கான கருத்தரங்கு

அட்டாளைச்சேனை ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்தில் USA நடாத்தும் O/L மாணவர்களுக்கான கருத்தரங்கு இனிதே நிறைவுற்றது.

 

 

எமது அட்டாளைச்சேனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கடந்த மாதம் தொட்டு இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவ,மாணவியர்களுக்கான இறுதிக் கருத்தரங்குகள் ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலய அதிபர் உபைதுல்லாஹ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எமது அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டது.

 

 

கணித பாடம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் நுஸ்கி,சாஜித் மற்றும் சப்றான் ஆகியோராலும், விஞ்ஞான பாடம் மருத்துவ உள்நிலை பட்டதாரி சாஜித் அவர்களாலும், ஆங்கிலம் பல்கலைக்கழக மாணவர் மிஸ்பாஹ் அவர்களாலும், வரலாறு சட்ட உள்நிலைப் பட்டதாரி சப்றாஸ் அவர்களாலும் முன்னெடுக்கப்பட்டது.

 

இறுதி நிகழ்வுகள் இன்ஷா அல்லாஹ் நாளை கல்லூரி வளாகத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Afham Nizam
By Afham Nizam November 14, 2017 14:39
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*