எம்.ஐ.எம் மன்சூர் அவர்கள் செய்த சேவைக்கு யார் யாரோ உரிமை கோருகிறார்கள்.

Afham Nizam
By Afham Nizam November 12, 2017 13:05

எம்.ஐ.எம் மன்சூர் அவர்கள் செய்த சேவைக்கு யார் யாரோ உரிமை கோருகிறார்கள்.

அன்புக்குரிய நண்பர்களே..!!

பொதுமக்களே..!!

 

 

தற்போது நமது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை ஏ தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது இந்தச் செய்தியினை தாங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

 

 

சம்மாந்துறை வைத்தியசாலை B தரத்திலிருந்து A தரத்திற்கு தரமுயர்த்தபட்ட பாரிய சேவையானது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களின் முழு முயற்ச்சியின் பயனாகவே என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருக்கும் வேளை சிலர் இதன் தந்தை நாங்கள்தான், நான் என அவசர அவரசமாக விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

 

 

கௌரவ பா.உ.மன்சூர் அவர்கள் கிழக்கு மாகாண சபையில் சுகாதார அமைச்சராக இருந்த காலத்திலேயே இதற்கான வேலையில் அவர் அப்போதே இறங்கியிருந்தார், அதற்கான பல கட்ட முயற்ச்சியில் ஈடுபட்டிருந்தார் நீங்கள் வேண்டுமானால் முன்னாள் சுகாதார அமைச்சர் அட்டாளச்சேனை கௌர நசீர் அவர்களிடமோ, சுகாதார பிரதியமைச்சர் கௌர பைசல் காசிமிடமோ இது பற்றித் உத்தியோகபூர்வமாக தெரிந்து கொள்ளலாம்.

 

வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தினை சுகாதார பிரதியமைச்சர் கௌரவ பா.உ.மன்சூர் அவர்களிடமே சமர்ப்பித்திருந்தார், இந் நிகழ்வில் பங்கு பற்றியவர்களிடம் கேட்டுப்பாருங்கள் இதற்கு பக்கபலமாக யார் இருந்தார் என்று.

 

தற்போது எந்தப் பதவியும் இல்லாதிருக்கும் ஒருவரிடம் வைத்தியசாலையின் தர உயர்வுக் கடிதம் வழங்கப்பட்டிருக்குமா அல்லது பாராளுமன்ற உறுப்பினர் என்ற மக்கள் பிரதிநிதி பதவியில் உள்ள ஒருவரிடம் குறித்த கடிதம் ஒப்படைக்கப்பட்டிருக்குமா..???

சிந்தியுங்கள்.

 

Afham Nizam
By Afham Nizam November 12, 2017 13:05
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*