கல்முனை அபிவிருத்தியை தடுக்கும் இனவாதிகளிடம் அதிகாரத்தை  வழங்க சாய்ந்தமருது மக்கள் தயாரில்லை  

farsan
By farsan November 9, 2017 07:21

கல்முனை அபிவிருத்தியை தடுக்கும் இனவாதிகளிடம் அதிகாரத்தை  வழங்க சாய்ந்தமருது மக்கள் தயாரில்லை  

சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்தவன் என்ற வகையில் எங்களது ஊர் தனியான உள்ளூராட்சி சபையை பெற அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளது ,வாக்குறுதி வழங்கப்பட்ட சபையை ஏனைய ஊர்களுக்கு பாதகமில்லாத வகையில் வழங்கியே ஆகவேண்டும், எமக்கான சபையை முஸ்லிம் காங்கிரஸினால் மட்டுமே பெற்றுத்தர முடியும், தற்போது ஊர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைக்கு சுமுக தீர்வை பெற்றுக்கொள்ளும் வகையில் சபையை வழங்குவதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டாலும் நிச்சயம் முஸ்லிம் காங்கிரஸ் எங்களுக்கான சபையை பெற்றுத்தரும் என உறுதியாக நம்புகிறோம்.

அதேவேளை சபை வழங்குவதில் சிறிது கால தாமதம் ஏற்பட்டுள்ளதால் முஸ்லிம்களின் உரிமை குரலை பலகீனப்படுத்தும் எந்த நடவடிக்கைக்கோ பயங்கரவாதிகளின் கையில் நிருவாகத்தை வழங்கி கல்முனை மக்களை பலிக்கடாவாக்கும் எந்தவொரு செயற்பாடுக்கும் இடம் கொடுக்க முடியாது

இன்று முஸ்லிம்களின் இருப்பு பாதுகாப்பு என்பன கேள்விக்குறியாக இருக்கும் இந்த காலப்பகுதியில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் முஸ்லிம்களின் பாதுகாப்பு அரண் குரல் முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே முஸ்லிம்களின் உரிமை குரலை பலகீனப்படுத்தி அதை நசுக்கி முஸ்லிம்களை அடிமை சமூகமாக மாற்ற பல்வேறு மட்டத்திலுருந்தும் சதிகள் நடைபெறும் இக் காலப்பகுதியில் கட்சியை பலகீனப்படுத்த அனுமதிக்க முடியாது.

அத்துடன் கல்முனையில் உள்ள ஒரு சிலர் எம்மோடு துவேசமாக நடந்ததற்காக நாம் அந்த மக்களை பயங்கரவாதி மகேந்திரன் போன்றோரின கையில் வழங்க முடியாது கலிமா சொல்லாத வடக்கே உள்ள ஆனந்தி அவரது இனம் பற்றி கவலைப்படும் போது கலிமா சொன்ன நாம் எமது அயல் வீட்டு சகோதரனுக்கு தீங்கு ஏற்பட எவ்வாறு அனுமதிப்பது எமக்கிடையில் ஆயிரம் முரண் பாடுகள் இருந்தாலும் இந்த பயங்கரவாதிகளின் பிடியில் அதிகாரத்தை வழங்கி துரோகம் செய்யவும் முடியாது தொடர்ச்சியாக பகைமை உணர்வோடு இரு ஊரும் வாழவும் முடியாது

நான்கு உறுப்பினர்கள் இருந்த போதே பட்டப்பகலில் கல்வெட்டை உடைத்தார்கள் ,ஓர் வீதிக்கு முஸ்லிம் பெயர் வைக்க அனுமதிக்காதவர்கள், கல்முனை அபிவிருத்தியை தடுத்தவர்கள் அதிகாரம் அவர்களது கையில் கொடுத்தால் அல்லது அதிக பலம் கொண்டவர்களாக அவர்கள் மாறினால் எவ்வாறு நடப்பார்கள் சிந்திக்க வேண்டும்

சபை தாமதம் ஆவதால் சுயட்சை குழுவை களமிறக்குவது என்பது முஸ்லிம்களை படுகுழியில் தள்ளுவதற்க்கு சமம்.
இவ்வாறான செயற்பாட்டுக்கு ஒரு போதும் ஒத்துழைப்பு வழங்க முடியாது.

 

Fareed Muhamad
சாய்ந்தமருது
farsan
By farsan November 9, 2017 07:21
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

Recent Comments

  • zimra

    zimra

    Alhamdulillah. Inthe news le ikirathu nadantha nalla santhosam. Sariyyana mudiva quka sollunge. We r waiting for the gd news

    View Article
  • adminslmc

    adminslmc

    முஸ்லிம் பாடசாலைக்கு 3 மாடிக் கட்டிடத்தை வழங்கவுள்ள பௌத்த தேரர்

    View Article
  • k.m.m.Maharoof

    k.m.m.Maharoof

    I am a founder member in Slmc.i am in Wellampitiya.but no any Slmc members half me the flood…

    View Article