முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கத்தை, இறைவனை தவிர வேறு எந்தக் கொம்பனாலும் அழித்து விட முடியாது

farsan
By farsan November 9, 2017 07:07 Updated

முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கத்தை, இறைவனை தவிர வேறு எந்தக் கொம்பனாலும் அழித்து விட முடியாது

சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலான தியாக வரலாற்றைக் கொண்ட எமது கட்சியை, அதிலும் எமது சாய்ந்தமருது பிரதேச மக்கள் இந்த கட்சியின் வளர்ச்சிக்காக செய்த தியாகங்கள் என்பது, கட்சியின் வரலாற்றில் சாய்ந்தமருது மக்களின் பங்களிப்பை இன்றைய இளைஞர்கள் நிச்சயமாக தேடி அறிந்து கொள்ள வேண்டும்.

1989 ஆண்டு ஸ்தாபக தலைவர் மர்ஹூம்  அஷ்ரப் அவர்கள் முதலாவது பொதுத் தேர்தலை எமது கட்சி மரச் சின்னத்தில் தனியாக களம் இறங்கிய போது, அன்று ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஐ.தே. கட்சி முஸ்லிம் அமைச்சர்களினதும், அவர்களின் அடிவருடிகளினதும் அராஜகம் தேர்தல் களத்தில் பெரும் சவாலாகவே இருந்தது.

அம்பாறை மாவட்டத்தில்  எமது கட்சி மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றே ஆக வேண்டும் என்ற அடிப்படையில் வியூகம் அமைத்து செயற்பட்ட போது, சாய்ந்தமருது மண் கட்சியையும் தலைமையையும் 90 வீதமான மக்கள் ஏற்றுக் கொண்டு அன்றைய தேர்தல் வெற்றிக்கான பாதையையும் பங்களிப்பையும் செய்த போதும் கூட, துரதிர்ஷ்டவசமாக சுமார் 500 இற்கும் 600 இற்கும் இடைப்பட்ட வாக்குகளால், அந்த வெற்றி வாய்ப்பு கைநழுவி பெரும் துயரத்தில் அம்பாறை மாவட்டமே உறைந்து போனது. தலைவர் மாத்திரமே தெரிவானார். இந்த துயர நிகழ்வு தொடர்பில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளி வாசலில் தலைவர் அவர்களும் போராளிகளும் அழுது புலம்பி கைசேதப் பட்டோம்.

அன்று ஜும்மா தொழுகை கலைந்து பெரும் துயரங்களோடு வீடு செல்லும் வழியில் எமது இளைஞர்கள் இரண்டு பேர், அன்றைய ஐ. தே. கட்சி கோடரிக் காம்புகளால் துப்பாக்கி முனையில் களப் பலி ஆனார்கள். இது, சாய்ந்தமருது மண் எமது கட்சி வளர்ச்சிக்காய் செய்த பெரும் தியாகம். இவ்வாறு மாற்று அணியினராலும், பாஸிஷ புலிப் பயங்கரவாத தாக்குதல்களினாலும், எமது போராளிகள் பெரும் இம்சைகளையும், சவால்களையும், சந்தித்தோம். எமது போராளிகள் ஊரைவிட்டு வெளியேறி அகதி வாழ்க்கை வாழ்ந்தோம். இவ்வாறான தியாகப் பின்னணியைக் கொண்ட இந்த இயக்கத்தை, இறைவனை தவிர வேறு எந்தக் கொம்பனாலும் அழித்து விட முடியாது. இன்ஷா அல்லாஹ், இந்த தற்காலிக பின்னடைவு சரி செய்யப்பட்டு கட்சி இந்த தலைவன் தலைமையில் வீறு நடை போடும்.

சாய்ந்தமருது ஏ.ஜலால்டீன்  
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்
முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்.
farsan
By farsan November 9, 2017 07:07 Updated
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*