அக்கரைப்பற்றை 40 வருடங்களுக்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் ஒன்று சேர்க்கிறது

farsan
By farsan November 7, 2017 10:02

அக்கரைப்பற்றை 40 வருடங்களுக்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் ஒன்று சேர்க்கிறது

அக்கரைப்பற்று மாநகர சபையில் யார் யார் போட்டியிடுவது? மேயர் யார்? இவைதான் அக்கரைப்பற்றின் இன்றைய பரபரப்பான விடயமாக அமைகிறது. அக்கரைப்பற்றில் இடப்படும் வாக்குகளில் யாராவது அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒருவரே மேயர் ஆக வருவார். வந்துவிட்டுப் போகட்டுமே! ஆனால், 1976 ஆம் ஆண்டு தேர்தல் தொகுதி நிர்ணயத்தால் இரண்டு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் அக்கரைப்பற்றில் இன்றைய நிலையில், அறிமுகப்படுத்தப்படவிருக்கும் தொகுதிரீதியிலான மாகாண சபைத் தேர்தலிலோ அல்லது பாராளுமன்றத் தேர்தலிலோ அக்கரைப்பற்று மக்களால் இடப்படும் வாக்குகளால் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒருவன் மாகாண சபை உறுப்பினராகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராகவோ வர முடியாது. எனவே, இரண்டு துண்டுகளாக பொத்துவில் தொகுதிக்குள்ளும், சம்மாந்துறைத் தொகுதிக்குள்ளும் பிரிந்து கிடக்கும் அக்கரைப்பற்றை, தற்போது மேற்கொள்ளப்படும் மாகாண சபைத் தேர்தல் தொகுதி நிர்ணயத்தில் ஒன்று சேர்த்து ஒரே தொகுதியின் கீழ் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதனைப் பற்றி அக்கரைப்பற்றைச் சேர்ந்த எத்தனை பேர் பேசுகிறார்கள்? எழுதுகிறார்கள்? முயற்சிக்கிறார்கள்? ஆனால், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ் எங்களுக்கு வழங்கியுள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அனைவராலும் வழங்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் தொகுதி நிர்ணய முன்மொழிவுகளில் 100 : 100 வீதம் அக்கரைப்பற்றை ஒன்றாக ஒரே தொகுதியின் கீழ் கொண்டுவரும் யோசனைகளே சர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதே போன்று பொதுவான அமைப்புக்களால் வழங்கப்பட்டுள்ள முன்மொழிவுகளிலும் அக்கரைப்பற்றை ஒரே தொகுதியின் கீழ் கொண்டுவரும் முன்மொழிவுகளே முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்காக இன்று வரை முயற்சிகளைச் செய்துகொண்டிருக்கின்றோம். எதிர்வரும் 11.11.2017 காலை அம்பாறைக்கு வருகை தரவுள்ள தொகுதி நிர்ணயக் குழுவிலும் அதனையே வலியுறுத்தவும் எல்லோரும் தயாராக உள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.

இன்ஷா அல்லாஹ், பாராளுமன்றத்திற்கு தொகுதி நிர்ணய அறிக்கை சமர்பிக்கப்படும் போதும் அக்கரைப்பற்று ஒன்றாக இருப்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுதியாக இருக்கும் என்ற நிலைப்பாட்டிற்கு கட்சியைக் கொண்டு வந்திருக்கிறோம். இதனை சாதிக்க வேண்டிய தருணத்தில் “குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடுவதைப்” போன்று, அக்கரைப்பற்று மாநகர சபையில் யார் யார் போட்டியிடுவது? மேயர் யார்? என்பதில் ‘‘குடும்பிச் சண்டை போடும்’’ அக்கரைப்பற்று சகோதரர்களை எண்ணி வேதனைப்படுகிறேன். வெட்கப்படுகிறேன்.

farsan
By farsan November 7, 2017 10:02
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

Recent Comments

 • zimra

  zimra

  Alhamdulillah. Inthe news le ikirathu nadantha nalla santhosam. Sariyyana mudiva quka sollunge. We r waiting for the gd news

  View Article
 • adminslmc

  adminslmc

  முஸ்லிம் பாடசாலைக்கு 3 மாடிக் கட்டிடத்தை வழங்கவுள்ள பௌத்த தேரர்

  View Article
 • k.m.m.Maharoof

  k.m.m.Maharoof

  I am a founder member in Slmc.i am in Wellampitiya.but no any Slmc members half me the flood…

  View Article