மட்டு சென் மைக்கல் கல்லூரி மற்றும் வெபர் விளையாட்டு கட்டடத் தொகுதியின் குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை

farsan
By farsan October 30, 2017 04:09

மட்டு சென் மைக்கல் கல்லூரி மற்றும் வெபர் விளையாட்டு கட்டடத் தொகுதியின் குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை

(அகமட் எஸ். முகைடீன்)
மட்டக்களப்பு வெபர் விளையாட்டு கட்டடத் தொகுதியின் குறைபாடுகளை பார்வையிட்டு அதற்கான தீர்வினை வழங்கும் வகையில்

ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் பிரதி தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையிலான அமைச்சின் உயர்மட்டக் குழு குறித்த விளையாட்டு கட்டத் தொகுதிக்கு கடந்த  (28) சனிக்கிழமை நேரடி விஜயம்செய்தது.

இதேவேளை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீசின் 3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட ஆடுகள அபிவிருத்தியினையும்   பி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையிலான  உயர்மட்டக் குழு  நேரடி விஜயம்செய்து பார்வையிட்டனர்.

இவ்விஜயத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா, விளையாட்டுத்துறை அமைச்சரின் செயலாளர் சம்பத் திசானாயக்க, மட்டக்களப்பு மாநகர சபை பொறியியலாளர் தேவ தீபன், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், விளையாட்டுத்துறை அமைச்சின் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
சகல விளையாட்டு வீரர்களுக்கும் தேவையான ஒன்றாக காணப்படும் ஜிம் பயிற்சியினை மேற்க்கொள்வதற்கான நிலையம் ஒன்றை இவ்விளையாட்டு கட்டடத் தொகுதியில் அமைப்பதற்கு இதன்போது ஆலோசிக்கப்பட்டது.
மேலும் குறித்த விளையாட்டு கட்டடத் தொகுதியின் மூலம் விளையாட்டு வீரர்கள் நன்மையடையும் வகையிலான செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.
farsan
By farsan October 30, 2017 04:09
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

Recent Comments

  • zimra

    zimra

    Alhamdulillah. Inthe news le ikirathu nadantha nalla santhosam. Sariyyana mudiva quka sollunge. We r waiting for the gd news

    View Article
  • adminslmc

    adminslmc

    முஸ்லிம் பாடசாலைக்கு 3 மாடிக் கட்டிடத்தை வழங்கவுள்ள பௌத்த தேரர்

    View Article
  • k.m.m.Maharoof

    k.m.m.Maharoof

    I am a founder member in Slmc.i am in Wellampitiya.but no any Slmc members half me the flood…

    View Article