கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி இணக்கம்: அமைச்சர் ரவூப் ஹக்கீமின் முயற்சிக்கு பலன்

farsan
By farsan October 28, 2017 11:48

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி இணக்கம்: அமைச்சர் ரவூப் ஹக்கீமின் முயற்சிக்கு பலன்

வெளிமாகாணங்களில் நியமனம் வழங்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண ஆசிரியர்களை சொந்த மாகாணங்களில் நியமிக்குமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

கல்வியல் கல்லூரியில் டிப்ளோமா பட்டம்பெற்றவர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் நியமனங்களின்போது, வெளி மாகாணங்களில் நியமனம்பெற்ற கிழக்கு மாகாண ஆசிரியர்களை, அந்த மாகாணத்திலேயே இடமாற்றம் செய்யுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (28) கட்டாரில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

கிழக்கு மாகாணத்தில் வெற்றிடங்கள் தாராளமாகவுள்ள நிலையில், அவை நிரப்பப்படாமல் கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு வெளி மாகாணங்களில் நியமனம் வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க நேரிடுவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

இதனை செவிமடுத்த ஜனாதிபதி, வெளி மாகாணத்தில் நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்தில் உள்வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்தார்.

farsan
By farsan October 28, 2017 11:48
Write a comment

1 Comment

  1. zimra October 28, 14:00

    Alhamdulillah. Inthe news le ikirathu nadantha nalla santhosam. Sariyyana mudiva quka sollunge. We r waiting for the gd news

    Reply to this comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*