மூக்குக் கண்ணாடிகள் நமக்கு என்ன செய்கின்றன?

Afham Nizam
By Afham Nizam September 26, 2017 15:00

மூக்குக் கண்ணாடிகள் நமக்கு என்ன செய்கின்றன?

பார்வை என்பது மற்றவர் கண்களுக்குத் தெரியாமல் இருப்பதைப் பார்க்கமுடிகிற கலையாகும்.

 

 

 

 

மற்ற உறுப்புகளில் பிரச்னை ஏற்படும்போது, அதைக் காலப்போக்கில் சரி செய்யமுடியும் எனில், கண்ணில் ஏற்படும் பிரச்னைக்கு மட்டும் ஏன் காலம் பூராவும் கண்ணாடி அணிந்துகொண்டே இருக்க வேண்டும்?

 

 

இந்தக் கேள்வியை யாருமே கேட்பதில்லையே ஏன்?

 

 

கண்ணில் பிரச்னை ஏற்பட்டால் கண்ணாடி, அல்லது லென்ஸ், அல்லது அறுவை சிகிச்சை என்று நாம் முடிவு செய்துவிட்டோம். ஏன், அது ஒரு மத நம்பிக்கையைப்போல உறுதியடைந்த ஒன்றாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

 

 

கண்ணாடி போட்டுக்கொள்பவர், கண்ணாடிக் கம்பெனியின் சொத்தாகி விடுகிறார். கண்கள், கண்ணாடியின் அடிமைகளாகி விடுகின்றன.

 

 

மூக்குக் கண்ணாடிகள் நமக்கு என்ன செய்கின்றன?

 

மூக்குக் கண்ணாடிகள் நமக்கு எப்போதுமே நன்மை செய்வதில்லை. கூடுதலாகவோ குறைவாகவோ கெடுதிதான் செய்கிறது. இயல்பான பார்வையை அவற்றால் கொண்டுவரவோ கொடுக்கவோ முடியாது. ஏதாவதொரு உட்குழிவான அல்லது மேற்புறம் குவிந்த ஒரு கண்ணாடி வில்லையின் மூலமாக ஏதாவதொரு நிறத்தைப் பார்த்தால் இது விளங்கும்.

 

அந்த நிறம், கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது உண்மையிலேயே இருப்பதைவிட தீவிரம் குறைந்த நிலையில் (less intense) தெரியும். நிறமானாலும் வடிவமானாலும், கண்ணால் காண்பதைவிட தெளிவு குறைவாகவே கண்ணாடி மூலம் பார்க்கமுடியும்.

 

 

மூக்குக் கண்ணாடி அணியும் பெண்கள் நாளடைவில் நிறக்குருடாகிவிடுவார்கள். கடைகளுக்குச் சென்று எதற்காவது ‘சாம்பிள்’களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவர்கள் மூக்குக் கண்ணாடியை கழட்டிவிடுவதைப் பார்க்கமுடியும்! மூக்குக் கண்ணாடி போடாமல் பார்க்கும்போது தோன்றும் நிறத்தைவிட, போட்டுப் பார்க்கும்போது நிறம் இன்னும் தெளிவாக, கூடுதலாகத் தெரிகிறது எனில், பார்வைத் திறன் மிகவும் மோசமாகிவிட்டது என்று அர்த்தம்.

 

 

பல வகையான லென்ஸ்கள் உள்ளன. மூ.க. போடுவதால்தான் தெளிவாகப் பார்க்கமுடிகிறது என்றால், ஒளிக்கதிர்களின் பிரதிபலிப்பில் (refraction) ஏற்படும் தவறுகள் நிரந்தரமாக்கப்படுகின்றன என்று அர்த்தம். பொடி எழுத்துகளை மூக்குக் கண்ணாடி போட்டுதான் படிக்கமுடிகிறது என்றால், நாளடைவில் ஏற்கெனவே மூக்குக் கண்ணாடி போடாமல் படிக்கமுடிந்த பெரிய எழுத்துகளையும் மூ.க. போட்டால்தான் படிக்க முடியும் என்ற நிலை ஏற்படும்.

 

 

20/70 அடி கிட்டப்பார்வை உள்ள ஒருவர், மூக்குக் கண்ணாடி போட்ட பிறகு 20/20-ல் பார்க்கமுடிகிறது என்றால், ஒரே வாரத்தில் அது 20/200 அடியாக கூடிப்போகும். அதாவது 70 அடி தூரத்தில் உள்ளதை 20 அடி தூரம் அருகில் சென்றால்தான் பார்க்கமுடியும் என்ற பிரச்னை மூக்குக் கண்ணாடி போட்ட பிறகு 20/20-ஆகக் குறைந்து, பிறகு ஒரு வாரத்திலேயே 200 அடி தூரத்தில் உள்ளதையும் 20 அடிக்கு அருகில் கொண்டுவந்தால்தான் பார்க்கமுடியும் என்ற சூழ்நிலை உருவாகும்.

 

 

இன்னும் பலருக்கு, பகலில் மூக்குக் கண்ணாடி போட்டு ஒழுங்காகத் தெரிவதெல்லாம் இரவு நேரத்தில் தெரிவதில்லை!

 

 

 

மூக்குக் கண்ணாடி உடைந்துபோய், ஓரிரு வாரங்கள் அது இல்லாமல் பார்க்கவேண்டி இருந்தால், அந்தக் காலகட்டத்தில் இயற்கையான பார்வைத் திறன் கூடியிருப்பதை உணரமுடியும். மூக்குக் கண்ணாடி போடாமல் இருந்தால், பார்வைத் திறனானது கூடிக்கொண்டேதான் இருக்கும். முதன்முறையாக மூக்குக் கண்ணாடி போட்டவுடன் ஒரு மாதிரியாக இருக்கும். கொஞ்சம் பழக வேண்டும் என்று டாக்டர் சொல்லுவார்! ஏன்? ஏனெனில், மூக்குக் கண்ணாடியை நம் கண்கள் என்றுமே ஏற்றுக்கொள்வதில்லை.

 

 

பார்க்கும் காட்சிகளின் தளத்தை எல்லா மூக்குக் கண்ணாடிகளுமே சுருக்கிவிடுகின்றன. இயல்புக்கும் இயற்கைக்கும் மாறான ஒரு விஷயம் என்பதால்தான், மூக்குக் கண்ணாடி போட்ட பிறகு சிலருக்குத் தலைவலி, தலைச்சுற்றல் போன்றவை வருகின்றன. பல திசைகளிலும் சுதந்தரமாக அவர்களால் கண்களைச் சுழற்ற முடிவதில்லை. இந்த லட்சணத்தில், தலைவலிக்காகத்தான் மூ.க. போடுகிறேன் என்று சொல்வது காமெடியா ட்ராஜடியா என்று சொல்ல முடியவில்லை!

 

 

 

தீவிரமான ஒளியை மூக்குக் கண்ணாடி வழி பார்க்கும்போது, அது மூக்குக் கண்ணாடியிருந்து பிரதிபலிக்குமானால், தெருவில் போகும்போது பெரிய அபாயத்தை அது உண்டு பண்ணலாம். ராணுவ வீரர்கள், கடல் பயணிகள், விளையாட்டு வீரர்கள், குழந்தைகள் போன்றவர்களுக்கு மூ.க.வால் பெரிய பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, astigmatism என்று சொல்லப்படும் சிதறல் பார்வை கொண்டவர்களுக்கு இப்பிரச்னை தீவிரமாக உணரப்படுகிறது.

 

 

குழந்தைகளுக்கு மூக்குக் கண்ணாடி   அணியச் செய்துவிட்டால் போதும், தேவதைகள் அழ ஆரம்பித்து விடுகிறார்கள் என்கிறார் டாக்டர் பேட்ஸ். கவிதை மாதிரி ஒரு உண்மையை அழகாகச் சொல்லியிருக்கிறார்!

 

 

தூரப்பார்வை உள்ள கண்கள் நாளடைவில் கண்ணில் உள்ள லென்ஸின் வளைவைக் கொஞ்சம் மாற்றி, கண்ணின் தசைகளைப் பயன்படுத்தி தன்னைத்தானே சரிசெய்துகொள்கிறது. ஆனால், சாதாரண கிட்டப்பார்வை உள்ள கண்ணால் இப்படிச் செய்யமுடிவதில்லை. இயல்பான, இயற்கையான பார்வைக்கு மூக்குக் கண்ணாடியானது ஒரு மாற்றே கிடையாது என்பதுதான் சத்தியம்.

 

 

நன்றி: தினமணி

 

Afham Nizam
By Afham Nizam September 26, 2017 15:00
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

Recent Comments

 • zimra

  zimra

  Alhamdulillah. Inthe news le ikirathu nadantha nalla santhosam. Sariyyana mudiva quka sollunge. We r waiting for the gd news

  View Article
 • adminslmc

  adminslmc

  முஸ்லிம் பாடசாலைக்கு 3 மாடிக் கட்டிடத்தை வழங்கவுள்ள பௌத்த தேரர்

  View Article
 • k.m.m.Maharoof

  k.m.m.Maharoof

  I am a founder member in Slmc.i am in Wellampitiya.but no any Slmc members half me the flood…

  View Article