கிழக்கு மாகாண ஹாபிழ்களுக்கு நடத்தப்பட்ட அல் குர் ஆன் மனனப் போட்டிகள் நிறைவு

farsan
By farsan July 17, 2017 11:13

கிழக்கு மாகாண ஹாபிழ்களுக்கு நடத்தப்பட்ட அல் குர் ஆன் மனனப் போட்டிகள் நிறைவு

கிழக்கு மாகாண ஹாபிழ்கள் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட கிழக்கு மாகாண ஹாபிழ்களுக்கான குர்ஆன் மனனப் போட்டிகளின் மாவட்ட மட்ட போட்டிகளின் இறுதிப் போட்டி  கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபையில் இடம்பெற்ற  இந்த போட்டி நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட் பிரதம  அதிதியாக கலந்து கொண்டிருந்தார்,

 

கிழக்கு மாகாண முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட் அவர்களினால்  ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் அம்பாறை,மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும்  மேற்பட்ட ஹாபிழ்கள் இந்த குர்ஆன் மனனப் போட்டிகளில் பங்கேற்றிருந்தனர்,

இதன் போது  இறுதிப் போட்டிக்கு தெரிவான 46 ஹாபிழ்களுக்கான போட்டி கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது,

 

இதன் போது அம்பாறை மாவட்டத்தைச்  சேர்ந்த 15 ஹாபிழ்களும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 16 ஹாபிழ்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஹாபிழ்களும் குர்ஆன் மனனப் போட்டி இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.

 

இந்நிலையில் ஹாபிழ்களின் மாபெரும் கௌரவிப்பு மாநாடு எதிர்வரும் செப்டம்பர்  மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது,

 

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம் எச் எம் அஷ்ரபின் ஞாபகார்த்தமாக இந்த மாபெரும் மாநாடு இடம்பெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது,

இதில்   வெற்றி பெறும் ஹாபிழ்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதுடன் ஏனைய ஹாபிழ்களும் இதன் போது கௌரவிக்கப்படவுள்ளனர்.

 

farsan
By farsan July 17, 2017 11:13
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

Recent Comments

 • zimra

  zimra

  Alhamdulillah. Inthe news le ikirathu nadantha nalla santhosam. Sariyyana mudiva quka sollunge. We r waiting for the gd news

  View Article
 • adminslmc

  adminslmc

  முஸ்லிம் பாடசாலைக்கு 3 மாடிக் கட்டிடத்தை வழங்கவுள்ள பௌத்த தேரர்

  View Article
 • k.m.m.Maharoof

  k.m.m.Maharoof

  I am a founder member in Slmc.i am in Wellampitiya.but no any Slmc members half me the flood…

  View Article