மு.கா எதிரிகளால் பலப்பட்டது; உள்ளிருந்தோரால் உடைபட்டது……

farsan
By farsan July 13, 2017 15:48

மு.கா எதிரிகளால் பலப்பட்டது; உள்ளிருந்தோரால் உடைபட்டது……

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் சமூக இயக்கத்தை வெளியில் எதிரிகளாக இருந்த யாரும் உடைக்கவில்லை. உள்ளுக்குள் இருந்தவர்களே உடைத்தனர். மு.காவின் ஆரம்பக்கட்டத்திலிருந்து இன்று வரை இதுவே வரலாறு.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த கல்முனை முன்னாள் அமைச்சர் மன்சூர் அவர்களால் மு.கா. உடைக்கப்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சம்மாந்துறை முன்னாள் அமைச்சர் மர்ஹூம் மஜீத் அவர்களால் மு.கா. உடைக்கப்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சாய்ந்தமருது முன்னாள் எம்.பி மயோன் முஸ்தபா அவர்களால் மு.கா. உடைக்கப்படவில்லை.

சுதந்திரக் கட்சியின் நிந்தவூர் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் முஸ்தபா அவர்களால் மு.கா. உடைக்கப்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அட்டாளைச்சேனை எம்.பி மர்ஹூம் ரிஸ்வி சின்னலெப்பை அவர்களால் மு.கா. உடைக்கப்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அட்டாளைச்சேனை மா.ச.உ. மர்ஹூம் மஷூர் சின்னலெப்பை அவர்களால் மு.கா. உடைக்கப்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அக்கரைப்பற்று எம்.பி மர்ஹூம் உதுமாலெப்பை அவர்களால் மு.கா. உடைக்கப்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பொத்துவில் எஸ்.எஸ்.பீ. மஜீத் அவர்களால் மு.கா. உடைக்கப்படவில்லை.

இவர்களில் ஒரு சிலரைத் தவிர ஏனையவர்கள் அனைவரும் பிந்திய நாட்களில், மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களோடும் – தற்போதைய தலைவர் றஊப் ஹக்கீமோடும் இணைந்து – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பலப்படுத்துவதிலும் – அதற்காக உழைப்பதிலும் ஈடுபட்டனர்.

மாறாக;

மு.கா.விலிருந்த முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் மு.கா.வை உடைத்தார்.

மு.கா.விலிருந்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மு.கா.வை உடைத்தார்.

மு.கா.விலிருந்த முன்னாள் எம்.பி. அசீஸ் மு.கா.வை உடைத்தார்.

மு.கா.விலிருந்த அமைச்சர் றிசாட் மு.கா.வை உடைத்தார்.

மு.கா.விலிருந்த அமைச்சர் நஜீப் ஏ மஜீத் மு.கா.வை உடைத்தார்.

மு.கா.விலிருந்த அமைச்சர் அமீர் அலி மு.கா.வை உடைத்தார்.

மு.கா.விலிருந்த முன்னாள் அமைச்சர் பசீர் சேகு தாவூத் மு.கா.வை உடைக்கிறார்.

மு.கா.விலிருந்த முன்னாள் அமைச்சர் ஹசன் அலி மு.கா.வை உடைக்கிறார்.

இவர்கள் எல்லோரும் ஒன்றில் அமைச்சுப் பதவிக்காகவோ அல்லது தேசியப்பட்டியல் பாராளுமன்ற பதவிக்காகவோதான் மு.காவை உடைத்தனர். சமூகத்திற்காகவல்ல.

இப்படித் தனித்தனியாக உடைத்தது போதாது என்று தற்போது கூட்டாகச் சேர்ந்து உடைக்க முயற்சிக்கிறார்கள். அதுவும் பதவிக்காகவே உடைக்க முனைகின்றனர்.

மு.கா. எதிரிகளை விட தனது உறுப்பினர்களிடமே அதிகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து மிகத்தெளிவாக புரிய முடிகிறது.

இதுவே தொடரும் வரலாறாகவும் இருக்கிறது.

மக்கள் இவர்களைச் சரியாக அடையாளம் கண்டு இன்ஷா அல்லாஹ் இத்தோடு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும்.

– எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன் –

தவம் – கிழக்கு மாகாணசபை உறுப்பினர்

farsan
By farsan July 13, 2017 15:48
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

Recent Comments

  • zimra

    zimra

    Alhamdulillah. Inthe news le ikirathu nadantha nalla santhosam. Sariyyana mudiva quka sollunge. We r waiting for the gd news

    View Article
  • adminslmc

    adminslmc

    முஸ்லிம் பாடசாலைக்கு 3 மாடிக் கட்டிடத்தை வழங்கவுள்ள பௌத்த தேரர்

    View Article
  • k.m.m.Maharoof

    k.m.m.Maharoof

    I am a founder member in Slmc.i am in Wellampitiya.but no any Slmc members half me the flood…

    View Article