வவுனியா மாவட்டம் முழுவதும் முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்தி மழை

farsan
By farsan July 13, 2017 12:52 Updated

வவுனியா மாவட்டம் முழுவதும்  முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்தி மழை

வவுனியா மாவட்டத்திலுள்ள சின்னப்பள்ளிக்குளம், கோவில்குளம் தமிழ் மகா வித்தியாலயம், மடுன்கந்தை சிங்கள மகா வித்தியாலயம், வவுனியா கல்வியியல் கல்லூரி, பட்டனிச்சூர் முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் சாலம்பைக்குளம் போன்ற இடங்களில் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் நோக்கில், கிராமிய குடிநீர் வழங்கல் திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (12) திறந்துவைத்தார்.

குறித்த இடங்களில் நீண்டகால தேவையாக காணப்பட்ட, சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தை தங்களுக்கு வழங்கியமைக்காக பிரதேசவாசிகள் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வட மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச். ரயீஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாருக், எம்.பி. பாருக், வவுனியா நகரசபை முன்னாள் உறுப்பினர் மாஹிர், வட மாகாண பிரதி பொது முகாமையாளர் உமர் லெப்பை, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

farsan
By farsan July 13, 2017 12:52 Updated
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*