மர்ஹூம் அஷ்ரஃப் ஞாப­கார்த்த கிண்ண கிரிக்கெட் சுற்­றுப்போட்டி

farsan
By farsan July 5, 2017 12:17

மர்ஹூம் அஷ்ரஃப் ஞாப­கார்த்த கிண்ண கிரிக்கெட் சுற்­றுப்போட்டி

(பிறவ்ஸ்)
சாய்ந்தமருது டஸ்கஸ் விளையாட்டுக் கழகத்தின் 5ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்­டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் ஞாப­கார்த்த கிண்ணம் மின்­னொளி கிரிக்கெட் சுற்­றுப்போட்டி

சாய்ந்­த­ம­ருது கடற்­க­ரையில் பௌசி விளை­யாட்டு மைதா­னத்தில் நடைபெற்று வரு­கி­ற­து.
5 நாட்களாக நடைபெற்­று­க்கொண்­டி­ருக்­கும் இச்சுற்றுப் போட்டியில் கிழக்கு மாகாணத்திலுள்ள 72 அணிகள் பங்குபற்றுகின்றன. இந்­நி­லையில், நாளை வியா­ழக்­கி­ழமை (06) இறு­திச்­சுற்றுப் போட்டி நடை­பெ­ற­வுள்­ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் டஸ்கஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவருமான ஏ.எல் அப்துல் மஜீட் தலைமையில் இடம்பெறும் இந்­நி­கழ்­வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதி­தி­யாக கலந்­து­கொள்­கி­றார்.
கெளரவ அதிதிகளாக விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் ஆகி­யோரும் சிறப்பு அதி­தி­க­ளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ. றஸாக், அரிப் சம்சுதீன், ஐ.எல்.எம். மாஹிர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்­ள­னர்.
farsan
By farsan July 5, 2017 12:17
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*