குழந்தை பாக்கியமின்மை’ இஸ்லாமிய மருத்துவ பார்வையில்.

farsan
By farsan June 17, 2017 09:31

குழந்தை பாக்கியமின்மை’ இஸ்லாமிய மருத்துவ பார்வையில்.

இறைவன் ஒரு மனிதனுக்கு வழங்கிய செல்வங்களில் மிகவும் முதன்மையானது குழந்தை செல்வம் என்றால் அது மிகையாகது.குழந்தை செல்வத்திற்கு முன்னால் பதவி,பட்டம்,சொத்துக்கள்,உறவுகள் எதுவும் நிகராகது.இறைவன் அல்குர்ஆனில் குழந்தை பாக்கியம் சம்பந்தமாக குறிப்பிடுகின்ற போது,

‘அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு  
   _பெண் குழந்தையையும்
   _ஆண் குழந்தையையும்
   _ஆண்,பெண் இரு குழந்தையையும்
   _குழந்தை பாக்கியமில்லாதவர்களாகவும் 
ஆக்கியுள்ளான்.நிச்சயமாக இறைவன் நன்கு அறிந்தவனாகவும் வல்லமையுள்ளவனாகவும் இருக்கிறான்’.மேலும் முஹம்மது நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். ‘உங்களுடைய குழந்தை செல்வங்கள் இறைவனால் உங்களுக்கு வழங்கப்பட்ட கொடைகள் என்றார்கள்’.

நபிமார்கள் இறைவனிடம் துஆ செய்யும்போது குழந்தையை தருவாயாக என கேட்கவில்லை.மாறாக குழந்தைகளை கொடையாக தருவாயாக என்றே கேட்டார்கள்.நபிமார்களுகளுக்கு கூட
_பலருக்கு ஆண்,பெண் இரு குழந்தையையும்
_சிலருக்கு பெண் குழந்தையை மட்டும் (முஹம்மது நபி)
__சிலருக்கு ஆண் குழந்தையை மட்டும் (இப்றாஹிம் நபி)
_ சிலருக்கு குழந்தை பாக்கியமில்லாதவர்களாகவும்
(யஹ்யா நபி)
ஆக்கியிருந்தான்.

எவ்வளவு கவலை,கஸ்டமென்றாலும் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும்போது அவையெல்லாம் மறக்கடிக்கப்படுகின்றது.
இன்று எத்தனை பேர் மாளிகைகளிலும்,பெரிய பதவிகளுடன் வாழ்கின்ற போதும் குழந்தை பாக்கியமில்லாத வாழ்க்கை வெறும் சூனியமாகவே இருக்கிறது.

குழந்தை பாக்கியத்தை பெற்றவர்கள் என்றென்றும் இறைவனுக்கு நன்றி செலுத்துபவர்களாக இருப்பதோடு அவர்களை வீட்டிற்கும்,நாட்டிற்கும்,சமூகத்திற்கும் பிரயோசமான ஸாலிஹான குழந்தைகளாக வளர்த்தெடுக்க வேண்டும்.இல்லையென்றால் இவ்வுலகிலும் நிம்மதியில்லை,கபூரிலும் நிம்மதியாக வாழ முடியாது.எனவே குழந்தை பாக்கியத்தை பெற்றவர்கள் அதை அமானிதமாக கருதி இக்காலத்தில் மிகவும் அவதானத்துடன் வளர்க்க வேண்டும்.

இறைவன் சிலருக்கு குழந்தைகளை கொடுத்து சோதிக்கிறான்.சிலருக்கு எடுத்து சோதிக்கிறான்.அந்த வகையில் குழந்தை பாக்கியமில்லாதவர்கள் பொறுமையுடன் இருப்பதோடு இறைவனிடத்தில் எந்நேரமும் பிராத்தனை செய்தவர்களாக இருக்க வேண்டும்.குழந்தை பாக்கியமில்லாத தம்பதிகள் தமக்கிடையே ஒருவரையொருவர் குறைகூறாது புரிந்துணர்வுடன் வாழ வேண்டும்.குழந்தை பாக்கியமின்றி பொறுமையுடன் கழிக்கும் ஒவ்வெரு நேரமும் மறுமையில் படித்தரம் கூடி கொண்டே செல்லும்.

இதனாலே நாளை மறுமையில் குழந்தை பாக்கியமுள்ளவர்கள் குழந்தை பாக்கியமில்லாதவர்களின் படித்தரத்தை பார்த்து நாங்கள் உலகில் குழந்தை பாக்கியமில்லாதவர்களாக இருந்திருக்க கூடாதா??என ஏங்குவார்கள்.

இன்று சமூகத்தில் குழந்தை பாக்கியமில்லாதவர்கள் பல்வேறுபட்ட கேள்விகளுக்கும்,சந்தர்ப்பங்களுக்கும் தினம் தோறும் முகம் கொடுக்க நேரிடும்.

திருமணம் முடித்து ஒரு சில மாதங்களிலே விசேஷமா??என பலர் கேட்பார்கள்.

ஒரு சில வருடங்களில் உறவினர்களின் குழந்தைகளை காட்டி இது உங்கள் பிள்ளையா?

திருமணம் போன்ற விசேட நிகழ்விற்கு செல்லும் போது உங்கள் குழந்தையை கூட்டிட்டு வரவில்லையா??

_ Shopping/கடைகளுக்கு செல்லும் போது உங்கள் குழந்தைக்கு ஏதும் வாங்கவில்லையா??

_குடும்பம், நண்பர்களின் குடும்பங்களுடன் ஒன்றுகூடலின் போது அவர்களுடைய குழந்தைகளின் குறும்புகளை பார்க்கும் போது
_  Nursery Function,Trip போன்றவற்றின் குழந்தைகளின் போட்டோக்களை மற்றவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்ற போது அதை பார்க்கின்ற போது இது போன்ற விடயங்களில் கண்ணீர் வடிக்கும் பல தம்பதிகள் இருந்த போதும் இவற்றுக்கு பொறுமையை தவிர வேறு ஆயுதமில்லை.

இதிலே குறிப்பாக பலர்கள் தெரிந்து கொண்டே வேண்டுமென்றே இவ்வாரான கேள்விகளை உள்குத்தலுடன் கேட்பவர்களே இன்று சமூகத்தில் அதிகம்.
குறிப்பாக பெண்கள் கூட்டாக சேர்ந்து இவ்வாறு குழந்தை பாக்கியமில்லாதவர்களை கேலி செய்வது பரவலாக இடம்பெறுகிறது.இவை நிறுத்தப்பட வேண்டும்.இவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.நீங்கள் இறைவனின் அருட்கொடையிலும் அடுத்தவரின் மானத்திலும் விளையாடுகிறீர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

குழந்தை பாக்கியமின்மை(Subfertility):
————————————
மருத்துவ அடிப்படையில் குழந்தை எதிர்பார்ப்புடன் பாதுகப்பற்ற/எவ்வித கருத்தடை முறையும் பாவிக்காது(unprotected Sexual inter course)தொடர்ச்சியான ஒரு வருடத்திற்கு மேலும் உடலுறவு இருந்தும் குழந்தையை பாக்கியமில்லாதவர்களை குறிப்பிட்டலாம்.இது இரு வகைப்படும்.
Primary Subfertility:
மேற்படி வரைவிலணக்கத்துடன் எந்தவொரு  குழந்தையுமில்லாதவர்களை குறிப்பிடப்படும்.
Secondary Subfertility:
ஏற்கனவே குழந்தைகள் இருந்தும் பிறகு குழந்தை எதிர்பார்ப்புடன் மேற்படி வரைவிலணக்கத்துக்குரியவர்கள்.

*உலக சனத்தொகையில் இனப்பெருக்க வயதில் குழந்தை பாக்கியமில்லாதவர்கள்   15%ஆனவர்கள்
*அமெரிக்காவில் மட்டும் குழந்தை பாக்கியமில்லாதவர்களாக 6.7 million என புள்ளி விபரவியல் கூறுகிறது.
*குழந்தை பாக்கியமின்மைக்கு ஆண்கள்,பெண்களின் காரணிகள் ஏறத்தாழ சமனாக அமைகிறது.சில காரணிகள் இன்னும் அறியப்படாதவையாக உள்ளது.
Male Factors for Subfertility
—————————–
Environmental Causes
-Use illicit Drugs(Ex-Anabolic Steroid)
-Alcohol
-Smoking
-Over weight
-Emotional Stress
-Industrial Chemicals
-Heavy Metal Expose
-Radiation/X-Ray
-Over heating Testes
Medical Causes
-Varicocele
-Infection
-Ejaculation issues
-Antibodies attack Sperms
-Undescented testes/tumor

Female Factors for Subfertility
———————————
Environmental factors
-like all male Factors
Medical Causes
-Ovulation Disorders(ex-Polycystic ovarian syndrome-PCOS)
-Hormonal problems
-Anatomical Problems of reproductive System
-Infection
-Endometriosis

ஏறத்தாழ 85-90% வரையான பிள்ளை பாக்கியமின்மைக்குறிய காரணிகள் மருத்துவம் மூலம் குணப்படுத்த கூடியதாக உள்ளது.பலர் இறைவன் குழந்தை பாக்கியத்தை தரவில்லை என நினைத்து எவ்வித மருத்துவ பரிசோதனைக்கும் செல்வதில்லை.இது அறியாமையாகும்.இறைவனில் நம்பிக்கை வைத்து உரிய வைத்தியர்களை(VOG) நாடி மேலதிக சோதனைக்கு ஆர்வம் காட்ட வேண்டும்.ஆனால் தற்போது குழந்தையின்மைக்கு காரணங்களில் ஆண்களின் சதவீதம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

பெரும்பாலான ஆண்கள் எங்களுக்கு விந்து வருகிறது தானே எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லையே என்று சொல்பவர்களே அதிகம்.பெரும்பாலான ஆண்கள் தம்மை சோதித்து பார்க்கவோ/வைத்தியர்களிடம் செல்லவோ தயக்கம்/ஒருவகை பயம்.தங்கள் மனைவியை மட்டும் வைத்தியரிடம் அணுப்பி வைக்கிறார்கள்.ஆனால் இதிலே 50% பெண்களில் எவ்வித குறைபாடுகள் இல்லாத போதும் ‘மலடி’என்ற பட்டத்தை சுமப்பவர்களாக பெண்களே உள்ளார்கள்.

இதிலே ஆண்களின் அனேக பிரச்சனைகள் 90% யானவை மொத்த விந்தனுக்களின் எண்ணிக்கை குறைவதால் ஏற்படுகிறது.இதை
Seminal Fluid Analysis என்ற பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம்.இதிலே விந்தனுக்களின் மொத்த கனவளவு(total volume),மொத்த எண்ணிக்கை(total count),இயக்கத்தன்மை(mobility),உருவமைப்பு(morphology),உயிருடன் இருக்க கூடியவை(viability)என்பன உள்ளடங்குகிறது.1ml seminal fluidயில் ஆகக்குறைந்தது நான்கு கோடி விந்தணுக்களுக்கு கூடுதலாக உள்ள போதே கருக்கட்டல் நிகழ வாய்ப்புள்ளது.இதை பல ஆண்கள் அறிவதில்லை.

எனவே ஆண்,பெண் இருவரும் உரிய வைத்தியரை நாடி பரிசோதனைக்கு உற்படுவதோடு இறைவன் நாடினால் நலவாக இருந்தால் குழந்தை பாக்கியம் தரட்டும் என்ற பிராத்தனையுடன் பொறுமையுடன் இருக்க வேண்டும்.
நன்றி
Dr. A.H. Subiyan
MBBS(SL),Diploma in Psychology (SL)
General Scope Physician
Doha-Qatar.

farsan
By farsan June 17, 2017 09:31
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*