அரை நூற்றாண்டு காலத்தில் வந்திராத இலக்கிய பதிவு இஸ்லாமிய தமிழிலக்கிய பொன்விழா மலர்

farsan
By farsan May 25, 2017 12:23

அரை நூற்றாண்டு காலத்தில் வந்திராத இலக்கிய பதிவு   இஸ்லாமிய தமிழிலக்கிய பொன்விழா மலர்

நீண்ட இடைவெளியின் பிறகு நேற்று தலைநகர் கொழும்பில் ஒரு நாள்.

கொழும்போ பெரு மழையில் குளித்து முழுகி, தலை உலர்த்தும் காட்சி கண்களுக்கு இதமாக இருந்தது.

காற்றில் விழுந்த விருட்சங்களைத் தேடினேன் இறுதி அஞ்சலிக்காக.

இருபதாண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாம் உள்ளே ஒரு பகற்பொழுதைக் கழித்ததும் நேற்றே.

நேற்றைய விழாவும் அது சார்ந்த நிகழ்வுகளும் மனதுக்கு நிறைவைத் தந்த அம்சங்களாகும்.

பொன்விழா மலர், அதன் உள்ளடக்கம், வடிவமைப்பு அனைத்தும் அழகுற அமைந்திருந்தது மேலதிக மகிழ்ச்சி.

குறிப்பாக, எனது அன்புக்கும் மரியாதைக்குமுரிய நவாஸ் சௌபிக்கும், கவிஞர் ரஊப் ஹஸீர் மற்றும் பொன்விழா மலருக்காக உழைத்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.

ஒரு விழா முடிந்ததும், அது தொடர்பான அம்சங்கள் எதுவும் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் இவ்வாறானதொரு மலராக பதிவு பெறவில்லை என்பது நாமனைவரும் அறிந்த ஒரு துயரமாகும்.

இந்தப் பொன் விழா மலர், ஒரு புதிய கண்திறப்பு.

மலரின் அனைத்துப் படைப்பாளிகளின் எழுத்துக்களும் சிறப்பாக இருந்தாலும், அன்பன் உமா வரதராசன் சில நினைவுகள் என்ற கட்டுரை மீண்டும் ஒரு முறை அஷ்ரபுடனான எனது உறவுகளை நினைத்துப் பார்க்கத் தூண்டியது.

எண்பது வயது கடந்த நிலையிலும் இலக்கியத்தின் பால் கொண்ட நேசத்தின் காரணமாக, இந்த விழாவில் பங்கேற்க வந்த இஸ்லாமிய தமிழிலக்கிய பொன்விழாவின் பிதாமகன் மரியாதைக்கும் அன்புக்கும் உரிய நண்பர் அஷ்ஷைக் செய்யித் ஹஸன் மௌலானா அவர்களுக்கு எனது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.

சிறப்பான இந்த முன்னெடுப்புகளை காரியசித்தமாக்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அன்புமிகு தலைவர் ரஊப் ஹக்கீம் அவர்களுக்கு எல்லா மனத்தடைகளையும் அகற்றியவனாக வாழ்த்துக் கூறுகிறேன்.

நேற்றைய அவரின் உரையும் காத்திரமானது. அரசியலுக்கு அப்பால் நாமனைவரும் கேட்க வேண்டிய உரை.

மனிதர்களின் உள்ளங்களை அல்லாஹ்வே அறிந்தவன்.

Slm Hanifa.

farsan
By farsan May 25, 2017 12:23
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*