அவன் ஒரு தேசத்தின் படைவீரன்

farsan
By farsan May 18, 2017 10:04 Updated

அவன் ஒரு தேசத்தின் படைவீரன்

குண்டுகள் துளைத்து குற்றுயிருடன் ரத்தம் பொசிய
அவள் வாசம் வெறித்து வாசல் வருகின்றான்

அவள் கத்திக் கதறி நெஞ்சோடணைத்து மயங்கினாள்

அறுவை மருத்துவர் ஏதேதோ சொல்ல
அவர்களை விலக்கி விட்டு அவளை அழைக்கிறான்

அன்பே ஒரு கவியெழுது ….!
ஆறட்டும் இக்காயம் என்றான்
அழுகின்ற அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு

அவள் கண்களில் தெரிகிறது
அவனுக்கான இறுதிக் கவிதை

வாசித்துக்கொண்டே அவளை இறுதியாய்
இழுத்து முத்தமிட்டுச் சுவாசிக்கின்றான்

காயங்கள் போகட்டும் கண்மணி
இந்தக் காதல் ஒன்றே போதுமடி
அவள் காதும் குளிர்கிறது

காயமாய் வந்தவன்
காயமின்றிக் காற்றாகின்றான்
அவள் கவிதைகள் கதறி அழுகின்றது

அவனது ஆத்மா சாந்திக்காய்
ஆயிரம் பிரார்த்தனைக் கூடங்கள்

அவள் மட்டும் தனியாய் அவன் படுக்கை அறையில்

கவியொன்றெளுதி காற்றில் வாசிக்கிறாள்
அரைச் சாளரத்தின் வழியே வந்த மெல்லிய காற்று
உடைந்து விழுந்த அவளது கண்ணீர்த் துளியை
அவனது வாசனையுடன் ஏந்திச் சென்றது.

Ranoos Muhammath Ismail
farsan
By farsan May 18, 2017 10:04 Updated
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

Recent Comments

 • adminslmc

  adminslmc

  முஸ்லிம் பாடசாலைக்கு 3 மாடிக் கட்டிடத்தை வழங்கவுள்ள பௌத்த தேரர்

  View Article
 • k.m.m.Maharoof

  k.m.m.Maharoof

  I am a founder member in Slmc.i am in Wellampitiya.but no any Slmc members half me the flood…

  View Article
 • thaj

  thaj

  அபிவிருத்தி எனும் மாயைக்குள் நாம் அகப்பட தேவையில்லை, எமது நாட்டின் கடன் சுமையை குறைப்பதற்கு உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கச் செயதல் அவற்றிற்கு…

  View Article