சமூகத்தின் கூட்டுவாழ்வில் இஸ்லாம் பிரதிபலிக்காதவரை உண்மையான வெற்றியை அடைந்து கொள்ளமுடியாது

adminslmc
By adminslmc March 2, 2017 05:58 Updated

சமூகத்தின் கூட்டுவாழ்வில் இஸ்லாம் பிரதிபலிக்காதவரை இஸ்லாம் உறுதிசெய்யும் வெற்றியை நாம் பெற்றும் கொள்ள முடியாதென்பதை உணர்ந்து கொண்டோம்.

இஸ்லாமிய அரசியல் அம்சங்களை ஒதுக்கி வைத்துக்கொண்டு முஸ்லிம் சமூகத்தின் கூட்டு வாழ்வு முறையை ஒழுங்கு செய்ய முடியாது என்ற யதார்த்தத்தையும் நாம் புரிந்து கொள்ளுகின்றோம். பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய அரச, சமூக அமைப்பிலிருந்து இஸ்லாம் பிரிக்கப்பட்டிருக்கவில்லை என்பதையும் நாம் அறிந்திருக்கின்றோம்.

பெருமானார் அவர்களின் காலத்திலும், அன்னாரைப் பின் தொடர்ந்து உயிர் தோழர்கள் காலத்திலும், அதன் பின்னும் இஸ்லாம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலங்களிலெல்லாம் இஸ்லாமே அரசாகவும், அரசே இஸ்லாமாகவும் இருந்ததையும் நாம் ஏற்றுக்கொண்டே தீரவேண்டும். அந்தஅடிப்படை உண்மையை ஏற்றுக்கொண்டால் இஸ்லாமிய அடிப்படையில் நமது அரசியல் விவகாரங்களுக்கு ஒருங்கிணைக்கப்படும் போதுதான் நமது கூட்டுச் சமூக வாழ்வும் இஸ்லாமிய அடிப்படையில் மாற்றமடையும் என்பது தெட்டத் தெளிவாகின்றது.

எனவே எமது சமூகத்தின் கூட்டமைப்பை இஸ்லாமிய வாழ்வு முறையாகமாற்றுகின்ற பொறுப்பும் அந்த வாழ்வு முறையின் கவர்ச்சியால் மற்ற சமூகங்களையும் அல்லாஹ்வின் தூதின் பக்கம் இழுத்தெடுக்கும் பொறுப்பும் எம்முடைய தென்பதை நாம் மறந்துவிட முடியாது. அப்போதுதான், “விசுவாசிகளே! உங்களை நீதியான சமூகமாக்கினோம். உங்கள் தூதர் உங்களுக்கும், நீங்கள் மற்றைய சமூகங்களுக்கும் முன்மாதிரியாக உள்ளீர்கள்” (அல்குர்ஆன் 2:143) என்ற கூற்றை உண்மைப்படுத்தியவர்களாவோம்.

“லாயிலாஹ இல்லல்லாஹ{ முஹம்மதுர் றஸ{லுல்லாஹ்” என்பதுவே முஸ்லிமையும் முஸ்லிமல்லாதவரையும் பிரிக்கும் வேலி என்பதை நாமெல்லாம் உணர்ந்திருக்கின்றோம். இந்த வேலியின் சுற்றுவரம்புக்குள் இருப்பவர்களை வேறெந்தக் கோடுகளும் பிரிக்கமுடியாது. இன நிற, மொழி, தேச கட்சி வரம்புகளால் கூறுபோட முடியாத முஸ்லிம் உம்மத் உலகப் பரப்பில் பெரும் வல்லமையையும் கௌரவத்தையும் பெற்றதொரு சமூகமாகும். இதில் ஓர் அங்கமே முஸ்லிம்களாகிய நாம்.

adminslmc
By adminslmc March 2, 2017 05:58 Updated
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

Recent Comments

  • adminslmc

    adminslmc

    முஸ்லிம் பாடசாலைக்கு 3 மாடிக் கட்டிடத்தை வழங்கவுள்ள பௌத்த தேரர்

    View Article
  • k.m.m.Maharoof

    k.m.m.Maharoof

    I am a founder member in Slmc.i am in Wellampitiya.but no any Slmc members half me the flood…

    View Article
  • thaj

    thaj

    அபிவிருத்தி எனும் மாயைக்குள் நாம் அகப்பட தேவையில்லை, எமது நாட்டின் கடன் சுமையை குறைப்பதற்கு உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கச் செயதல் அவற்றிற்கு…

    View Article