முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பது எப்படி?

adminslmc
By adminslmc February 22, 2017 04:09 Updated

ஒரு சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு முன் அச் சமூகம் பற்றித் தெளிவாகச் சிந்திக்கக்கூடிய தனிநபர்கள் ஒன்றுசேரவேண்டும். சமூகத்தின் பிரச்சினைகளை ஆராய்ந்து அடை யாளம் காணவேண்டும்.

அவைபற்றிக் குரலெழுப்ப வேண்டும் அவ்வாறு குரலெழுப்பும் கூட்டத்தின் கரங்களில் அரசியல் அதிகாரம் ஒப்படைக்கப்பட வேண்டும். அரசியல் அதிகாரத்தைப் பெற்றுள்ளவர்கள் உரிமை களை வென்றெடுக்க உழைக்க வேண்டும். இந்த நடைமுறையை முஸ்லிம் சமூகத்தின் “பிரதிநிதித்துவத்தை உருவாக்குதல்”என்றும் கூறலாம்.

எமது நாட்டின் அரசியல் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது குறிப்பாக சுதந்திரம் கிடைத்த பின் தமிழ் சிங்கள இந்திய வம்சாவளியினருக்கெல்லாம் சுதந்திரமானதும் காத்திரமானதுமான அரசியல் பிரதிநிதித்துவம் இருந்தபோது முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரம் அரசியல் பிரதிநிதித்துவம் இருக்கவில்லை என்பதை உணரலாம்.

சிங்கள தமிழ் சமூகங்களின் தலைமைத்துவம் முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவத்தையும் பிரதிநிதித்துவத்தையும் உருவாக்க எடுத்த முயற்சிகளையும் அவ்வாறு உருவாக்கப்பட்ட முஸ்லிம் தலைவர்கள் தமது எஜமான்களைத் திருப்திப் படுத்துவதற்காக முஸ்லிம் சமூகத்தின் சுதந்திரத்தையும் தன்மானத்தையும் அடிக்கடிஅடகு வைப்பதையுமே அண்மைக்கால வரலாறுகள் வெட்கத்துடன் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

சுதந்திரம் கிடைத்ததன் பின் ஒவ்வொரு சமூகமும் அரசியல் வானில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினூடாக தம்மைப் பிரதிநிதித்துவம் செய்து கொண்டிருந்தபோது முஸ்லிம் சமூகம் மாத்திரம் தனக்கென உத்தியோகபூர்வமான ஒரு குரல் இல்லாத ஊமைச் சமூகமாகவும், எடுப்பார் கைப்பிள்ளையாகவும் இருந்து வந்திருக்கின்றது.

சமூகத்தின் தன்மானமே மறைந்துவிடுமளவுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் பேரினவாதக் கட்சிக்குள் சிக்கிக்கொண்டு வெளியேற விரும்பாமலும், அந்தச் சேற்றின் துர்நாற்றத்தை முஸ்லிம் சமூகம் சுவர்க்கத்தின் சுகந்தமான காற்றாகவும் நம்பவேண்;டுமென வற்புறுத்தியதாலும்தான் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலைக்கான சரியான மார்க்கம், தனித்துவமான ஒரு முஸ்லிம் அரசியல் கட்சியை உருவாக்குவது என இளைஞர்கள் சிந்திக்கத் துவங்கினர்.

முஸ்லிம் கட்சிக்கான வித்து

இச்சிந்தனைகளின் ஆரம்ப வெளிப்பாடே காத்தான்குடித் தாயின் கருவுற்ற கர்ப்பத்தில் இருந்து 21-09-1880ல் தரித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற வித்தாகும். இந்த வித்து முளைவிட்டு ஆறு ஆண்டுகால அமைதிப்பணியின் பின்வேரூன்றி வளர்ச்சியை எய்தியபோது 29-11-1986இல் கொழும்பு “பாஷா விலா” மண்டபத்தில் வைத்து “அல்லாஹ{ அக்பர்” என்று தக்பீர் முழக்கத்துக்கு மத்தியில் ஒரு தேசிய அரசியல் கட்சியாக பிரகடனம் செய்யப்பட்டது.

அரசியல் கட்சியாக பிரகடனம் செய்யப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் என்ற சிறிய பயிர் திடீரென தேசிய ரீதியிலும் சர்வதேச மட்டங்களிலும் காத்திரமான முத்திரைகளையும் சுவடுகளையும் பதிப்பதை கண்ட தேர்தல் ஆணையாளர் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பிரகடனம் செய்ததுடன் முஸ்லிம் காங்கிரஸ் சாதாரணமான ஒரு பயிரல்ல அது ஒரு பெருவிருட்சம் என்பதை சொல்லாமல் சொல்லுவதுபோல் நிழல் தரு விருட்சத்தை அதன் சின்னமாகவும் வழங்கினார் எனவேதான் முஸ்லிம் காங்கிரஸ{க்கு தேர்தல் ஆணையாளரால் வழங்கப்பட்ட அங்கீகாரத்தை இலங்கை முஸ்லிம்களின் விடுதலைப் பிரகடனமாக நாம் நோக்குகின்றோம்.

அடிமை வாழ்வையே சொப்பனமாக எண்ணியிருந்த முஸ்லிம் சமூகத்தை நீண்டகாலத் துயிலிலிருந்து தட்டியெழுப்பும் பணியும் அதைச் சுற்றிப் பூட்டில்லாத இரும்புச் சங்கிலிகள் இன்னும் இருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டுவதும் – அந்தச் சங்கிலித் தொடரை முஸ்லிம் சமூகமெனும் உடலிலிருந்து கழற்றி விடுவதும் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இப்போது எதிர்நோக்கும் சவாலாகும்.

இப்பெரும் சவாலைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டவர்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இப்போது உங்களுடன் பேச வந்திருக்கின்றது.

தொடரும் ……

adminslmc
By adminslmc February 22, 2017 04:09 Updated
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*