இலங்கை முஸ்லிம்களின் தனித்துவம் இஸ்லாமே!

adminslmc
By adminslmc February 15, 2017 08:26 Updated

இலங்கை அரசியலில் சிங்கள – தமிழ் முஸ்லிம் மலையக சமூகங்கள் பற்றிப் பிரஸ்தாபிக்கப்படுகிறது.இந்த நான்கு முக்கிய சமூகங்களுள் சிங்கள, தமிழ்ச் சமூகங்கள் அவை பேசும் மொழியைக் கொண்டு மாத்திரமே அடையாளம் காணப்படுகின்றன. சிங்களம் பேசும் சிங்களவர்கள் பௌத்தர்களாகவோ, கிறிஸ்த வர்களாகவோ அன்றி ஹிந்துக்களாகவோ இருக்கலாம். அரசியல் அடையாளத்தை பொறுத்தவரை அவர்களின் மத நம்பிக்கை முக்கியமற்றதாகின்றது.

அதேபோல் தமிழ் பேசும் தமிழர்கள் வைஷ்ணவர்களாகவோ, சைவர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ இருக்கலாம். அவர்களின் ஆத்மீக நம்பிக்கை அரசியலில் முக்கியமற்றதாகிறது. இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் தமிழைப் பேசியபோதும் அவர்கள் இலங்கை அரசியலின் தேவைகளுக்காகத் தமிழர்களாகக் கணிக்கப்படுவதில்லை. அவர்களின் ஆத்மீக நம்பிக்கைகளும் முக்கியமற்றதாகின்றன. இந்திய வம்சாவளியினர் என்பதே அவர்களின் தனித்துவத்தின் அடையாளமாகும். பேசும் மொழியோ அன்றி ஆத்மீக நம்பிக்கையோ அல்ல.

முஸ்லிம்களைப் பொறுத்தவரையும் கூட அவர்களின் பேசும் மொழி முக்கியமற்றதாகிவிடுகின்றது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள முஸ்லிம்கள் இலங்கை அரசியலில் தமிழ்ச் சமூகமாகக் கருதப்படுவதில்லை மாறாக அவர்களின் இஸ்லாமிய வாழ்வு முறையின் அடிப்படையில் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். முஸ்லிம் சமூகத்தின் பல கூறுகள். பேசும் மொழியும் அவற்றின் பல்வேறு இனங்களும் தத்தமது முக்கியத்துவங்களை இழந்துவிட, எல்லோருக்கும் பொதுவான “லாயிலாஹ இல்லல் லாஹ{ முஹம்மதுர் றஸ{லுல்லாஹ்” என்ற நம்பிக்கை இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவரையும் இணைக்கும் கயிறாகத் தொழிற்படுகிறது.

எனவே இலங்கை முஸ்லிம்களின் தனித்துவம் இஸ்லாமாகும். இலங்கை முஸ்லிம்களின் தனித்துவமென்பது வேறு வார்த்தைகளின் சொல்வதெனில் இஸ்லாமிய வாழ்வு முறையை பேணுவதாகும். இலங்கை முஸ்லிம்களின் அரசியல் போராட்டமென்பது இஸ்லாமிய வாழ்வு முறையைப் பின்பற்றும் மக்கள் கூட்டத்தின் உரிமைகளை வென்றெடுப்பதுவாகும்.

adminslmc
By adminslmc February 15, 2017 08:26 Updated
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

Recent Comments

  • adminslmc

    adminslmc

    முஸ்லிம் பாடசாலைக்கு 3 மாடிக் கட்டிடத்தை வழங்கவுள்ள பௌத்த தேரர்

    View Article
  • k.m.m.Maharoof

    k.m.m.Maharoof

    I am a founder member in Slmc.i am in Wellampitiya.but no any Slmc members half me the flood…

    View Article
  • thaj

    thaj

    அபிவிருத்தி எனும் மாயைக்குள் நாம் அகப்பட தேவையில்லை, எமது நாட்டின் கடன் சுமையை குறைப்பதற்கு உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கச் செயதல் அவற்றிற்கு…

    View Article