அன்பின் காரியப்பருக்கு அஷ்ரபின் அனந்தரக்காரன் எழுதிக் கொள்வது..!

adminslmc
By adminslmc November 13, 2016 20:02 Updated

பேனை பிணம் தின்று…..
பேனை குருதியுண்டு……
பேனை கொலை செய்து ……
இப்படி ஒருராஜ்ஜியத்தின்

பொல்லாத பிரஜை நீங்கள்
மன்னித்துக் கொள்ளுங்கள்
மனது சொல்கின்றது….!

நேசிக்கும் வரிகளது
நான் சுவாசிக்கும் வரிகளது
தூஷிக்கும் வரிகளாய் நீர்
வேஷிக்க வைத்ததென்ன…?

வாப்பா யார் என்று
தம்பியிடம் நாம் கேட்டால்
நம் தாய் கலங்குவது
தர்மம்தான் காரியப்பரே
கணத்தில் நீங்கள் மாறந்ததென்ன…?

பேய்களும் வெளிவராத
உறங்காத இரவொன்றில்
மரணத்தை வென்று வாழும்
மௌனத் தவமியற்றி
கூன் விழுந்த முதுகெல்லாம்
வேல் பிடிக்க வைத்தவனின்
கூற்றை நீர் சிதைத்ததென்ன
குறுவாளைப் பதித்ததென்ன …?

புண்ணில் வேல் பாய்ச்சிப்
புடுங்கி எறிந்திடாமல்
கண்ணில் கூர் பாய்ச்சி
அடிக்கடி இழுப்பது போல்
சொல்லால் வதைத்ததென்ன
சொல்வாயோ வாய் திறந்து…?

நாக்கும் இருக்கிறது
செல்வாக்கும் இருக்கிறது
உயிரும் இருக்கிறது
அழகுடலும் இருக்கிறது
ஆற்றல் இருக்கிறது
அதைச் செய்ய எல்லாம் இருக்கிறது
தர்மம் இல்லையென்றால்
இறைவன் தயவும் இல்லையென்று
காரியப்பரே நீங்கள் கணத்தில் மறந்திடாதீர்

பாட்டெழுது தோழா நீ பாட்டெழுது
என்றவனின் பாட்டொன்றில்
பிழை கண்டால் அது சுத்தம்
வரிக்குள்ளே வரி கலந்து
பாலுக்குள் விஷம் கலந்தீர்
காரியப்பரே நீங்கள்
கணத்தில் மறந்ததென்ன …?

போர்க்களத்தில் அம்பு விட்ட
ஏர்க்களத்து மைந்தன் அவன்
கோட்டைக்குள் அரசாண்ட
கோழை அல்ல சக்கரவர்த்தி
குடி காத்த கொம்பன் அவர்
மடி காத்த தலைவர் அவர்
காரியப்பரே நீங்கள்
கணத்தில் மறந்ததென்ன …?

விடுதலை வாளின் தீப்பொறியை
தெருக்குப்பை நெருப்புக்கு
தோதாகச் சொல்லி விட்டீர்
பொறுக்காத என் நெஞ்சம்
நிறுத்தி வைத்துக் கேட்கிறது
காரியப்பரே நீங்கள்
கணத்தில் மறந்ததென்ன …?

மனசாட்சியுள்ளவரே…!
பிறர் பார்வை கவர்தலுக்காய்
பிழை செய்தல் தர்மம் என்றும்
பிறர் கேட்க செவி இனிக்க
வசை வைதல் தர்மம் என்றும்
பிறர் போற்றும் பொக்கிஷத்தில்
குறை கூறல் நீதியென்றும்
ஏற்கவா சொல்கின்றீர்
உம்மைப் போற்றவா சொல்கின்றீர்
காரியப்பரே நீங்கள்
கணத்தில் மறந்ததென்ன …?

புத்திரன் தந்த சட்டைக்கே
அகம் குளிர்ந்து பதிவிட்டு
களித்ததே உங்கள் தந்தை மனது

மானம் காக்கும் கோவணமும்
பிச்சையெடுக்கப் பாத்திரமும்
அச்சம் இல்லா வாழ்வியலும்
அளித்த வரிகளை சிதைத்து விட
காரியப்பரே நீங்கள்
கணத்தில் துணிந்ததென்ன ..?

ஆத்மா துடிக்கிறது
அழவே நினைக்கிறது
மறுமையில் நான் சாட்சி

உங்கள் விரல்களுக்கு
வாயிருக்கும் மனதிருக்கும்
மறுமையில் சந்திப்போம்…!
அஸ்ஸலாமு அலைக்கும்…!

(மறைந்த பெரும் தலைவர் மர்ஹூம் எம் எச் எம் அஷ்ரப் அவர்களின் நான் எனும் நீ கவிதைத் தொகுதியொன்றில் இடம் பெற்ற கவிதையொன்றினை உருக் குலைத்து கொலை செய்தமைக்காக எனது கண்டனம் இது.)

(முஹம்மத் ரனூஸ், சம்மாந்துறை)

15036606_1089514384500788_1732359488653339918_n 15037066_1304311802988857_962610576181448098_n

adminslmc
By adminslmc November 13, 2016 20:02 Updated
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

Recent Comments

 • zimra

  zimra

  Alhamdulillah. Inthe news le ikirathu nadantha nalla santhosam. Sariyyana mudiva quka sollunge. We r waiting for the gd news

  View Article
 • adminslmc

  adminslmc

  முஸ்லிம் பாடசாலைக்கு 3 மாடிக் கட்டிடத்தை வழங்கவுள்ள பௌத்த தேரர்

  View Article
 • k.m.m.Maharoof

  k.m.m.Maharoof

  I am a founder member in Slmc.i am in Wellampitiya.but no any Slmc members half me the flood…

  View Article