ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தங்களை ஏன்..? போராளிகள் என்று அழைக்கிறார்கள்..!!

adminslmc
By adminslmc November 1, 2016 19:04 Updated
Muhammath Ranoos

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் நமது விடுதலைப் பேரிகையின் கடந்து வந்த பாதைகளும் அதன் சுவடுகளும் எழுதப்பட வேண்டும் எனும் வரலாற்றுத் தேவை உருவாகியுள்ளதாக நான் கருதுகின்றேன்.

எனது முகப் புத்தகத்தில் நமது கட்சி குறித்த பதிவேற்றம் ஒன்றுக்கு பின்னூட்டமிட்ட நமது சமூகத்தின் படித்த இளைஞன் இப்படி ஒரு கேள்வியை பின்னூட்டமாக இட்டான்……

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களையும் அதன் மக்கள் பிரதி நிதிகளையும்,கட்சிப் பிரமுகர்களையும் போராளிகள் என்று அழைப்பதின் நியாயத்தை விளக்க முடியுமா……?

உண்மையில் இலங்கையின் அரசியல் கட்சிகளில் அதன் உறுப்பினர்களை போராளிகள் என்று அழைக்கும் ஒரே ஒரு அரசியல் கட்சி சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே.

இந்நிலையில் ந்த இளைஞனின் கேள்வியை குறிப்பிட்ட அந்த ஒரு இளைஞனின் கேள்வியாக அன்றி….. முஸ்லிம் சமூகத்தில் இன்று உருவாகி இருக்கின்றஒட்டுமொத்த இளைஞர் சமூகத்தின் கேள்வியாக நான் பார்க்கின்றேன்.

அவருக்கு இப்படி ஒரு நீண்ட விளக்கத்தினை அளிக்க வேண்டியதாயிய்று

இதனை கட்டாயம் நீங்களும் வாசிப்பதற்க்காக இங்கே குறிப்பிடுகின்றேன்.

அன்புச் சகோதரா…!

இப்பதிவில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஏன் அதன் உறுப்பினர்களைப் போராளிகள் என்று அழைக்கிறது என்பதற்கான விளக்கத்தை தரலாம் என்று நினைக்கின்றேன்.ஆனால் அதனை ஒரு வசனத்திலோ அல்லது ஒரு பந்தியிலோ அல்லது ஒரு கட்டுரையிலோ தர முடியாது என்பதே எனது அபிப்பிராயமாகும்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முகிழ்த்த காலப்பகுதி, அதனை அவசியமாக்கிய காரணிகள்,அதனுடைய பின்னணிகள் பற்றியும் அதன் பயங்கரம் மற்றும் முக்கியத்துவம்
பற்றி நாம் அறியும் போதுதான் இந்த கட்சியின் வரலாற்றையும், ஏன் இந்தக் கட்சியின் ஆதரவாளர்களைப் போராளிகள் என்று அழைக்கின்றார்கள் என்பது குறித்த விளக்கத்தையும் பெறலாம் என்று கருதுகின்றேன்.

உண்மையில் நான் பிறப்பதற்கு முன்னையே இந்த கட்சி ஆரம்பிக்கப் பட்டுவிட்டது என்றே சொல்லலாம்.அப்படியாயின் இந்தக் கட்சியின் ஆரம்ப கால போராட்ட வரலாறுகளை நான் அறிந்து கொண்டது எவ்வாறு என்பதற்கு கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

நமது கட்சியில் அதன் ஆரம்ப காலத்தில் இணைந்து இன்றுவரை இந்தக் கட்சியில் இருந்து சமூகப் பணியாற்றும் தியாகச் செம்மல்களுடனான உரையாடலும் அவர்களுடைய வாய் அசைவுகளை கூர்ந்து நோக்கியதுமே……புறம்பாக எனது தேடலும் வாசிப்பும் என்றும் கூறலாம்…..

இந்தக் கட்சி அதன் வரலாறு பற்றிய ஆய்வுக் குறிப்புக்களையும்,இக்கட்சி முஸ்லிம் அரசியலில் மற்றும் முஸ்லிம் தேசியக் கட்டுமானத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும் பல்கலைக் கழகத்தில் அரசறிவியலை சிறப்புப் பாடமாக கற்றவன் என்ற வகையில் நிறைய வாசித்திருக்கின்றேன்.

அப்படைப்புக்களில் எல்லாம் இக்கட்சியின் தியாகமிகு போராட்ட வரலாறுகள் மற்றும் சம்பவங்கள் யதார்த்தமாக சித்தரிக்கப் பட்டிருக்கவில்லை.காரணம் அவைகள் புலமைத்துவ நடையிலே எழுதப் பட்டிருந்தது என்பதாலாகும். அப்படைப்புக்கள் எல்லாம் முஸ்லிம் தேசியம்,மற்றும் இலங்கையின் இனத்துவ அரசியல் கட்டமைப்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் வகிபாகம்,இனப்பிணக்கு,சமாதானம் பேசுதல் போன்ற விடயங்களில் முஸ்லிம் காங்கிரஸ்… என்ன தாக்கம் செலுத்தியது…….இப்படி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை இலங்கையின் ஒரு அரசியல் கட்சி எனும் நோக்கில் வைத்து எழுதப்பட்டதாகும்.ஆய்வாளர்களினைப் பொறுத்தவரை அப்போக்கு நியாயமானதே.

இருந்தாலும் சாதாரண மனிதனுக்கும் விளங்கக் கூடிய வகையில் இப்பேரியக்கத்தின் வரலாறு எழுதப்படாமையின் வெளிப்பாடுதான் உங்களுடைய இவ்வினாவுக்கான அடிப்படையாகும். கட்சியின் வரலாற்றுப் பின்னணிச் சம்பவங்கள் கோர்க்கப்பட்டு எளிமையாக கட்சியின் வரலாறு எழுதப்படும் போது மாத்திரமே….இவ்வியக்கம் தலை முறை தலை முறையாக தனது வீரியத்தை இழக்காமல் முன் செல்லும்….

துரதிஷ்டவசமாக நமது கட்சியின் வரலாறு இன்னும் முழுமையாகத் தொகுக்கப் படவில்லை என்பது பெரும் குறைபாடாகும்.

மறைந்த தலைவரவர்களின் காலத்தில் முன்னெடுக்கப் பட்டிருக்கின்ற ஒரு சில முயற்சிகளை விட புறம்பாக இதனைத் தொகுக்க இதுவரை யாரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

தலைவர் ரவூப் ஹகீம் அவர்களின் முயற்சியால் தலைவரின் பாராளுமன்ற உரைகள் தொகுக்கப் பட்டிருப்பது நீங்கலாக.

அப்துல் மஜீத் ஆலிம் அவர்களின் தலைமைத்துவ ரகஷயங்கள்,அனிஷ்டஸ் ஜெயராஜாவின் கிழக்கின் உதயம் தேசத்தின் இதயம் எனும் இரண்டு பாகங்கள், அஷ்ரபின் அந்த எழு நாட்கள் மற்றும் ஒரு மாமன்னரின் பொற்காலம், தலைவரால் எழுதப்பட்ட அவரது கவிதைத் தொகுப்பான நான் எனும் நீ ,மற்றும் கட்சியில் சில வெளியீடுகள்,பேராசிரியர் காதர் அவர்களின் அஷ்ரப் எனும் அரசியல் விவேகி,பேராதனைப் பல்கலைக் கழக விரிவுரையாளரும் எனது ஆசானுமான ஏ.சர்ஜூன் ஆய்வுக்கட்டுரையாக இன்று வரை வெளி வராமல் தென்கிழக்குப் பலகலைக் கழக நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள பாரிய ஆய்வுக்கட்டுரை,கலாநிதி ஏ.அமீர்தீன் அவர்களால் எழுதப்பட்டுள்ள இலங்கையின் இனத்துவ அரசியலில் முஸ்லிம்கள் எனும் ஆங்கில நூல்,மற்றும் பேராசிரியர் அமீர் அலி மற்றும் பல புலமைத்துவ வாண்மையாளர்களால் அவ்வப்போது சமர்ப்பிக்கப் பட்டுள்ள ஆய்வுக் கட்டுரைகள் ……இன்னும் தலைவர் அவர்களைப் பற்றிப் பேசும் சில கவிதை நூல்கள்……இப்படி நிறைய ஆக்கங்கள் வெளிவந்துள்ள பொழுதிலும்……இக்கட்சியின் ஆரம்ப கால தியாகமிகுந்த வரலாற்றுச் சம்பவங்களை துல்லியமாகக் கூறும் வரலாற்றுப் பார்வையில் அமைந்த நூல் இன்னும் எழுதப் படவில்லை என்பது எனது அபிப்பிராயமாகும்.

கட்சி உருவாகி ஏறத்தாழ முப்பது வருடங்களாகி விட்டது.ஆனால் இன்றுவரை அதனது வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு கடத்துவதில் கட்சி மிகப் பெரும் தாமதத்தை எடுத்துவிட்டது என்பதே எனது அபிப்பிராயமாகும்.

தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல் பேசும் ஒரு சராசரி இயக்கமாக இந்தக் கட்சி மாற வேண்டிய சூழ் நிலைகள் ஏற்படுத்தப் பட்டாலும் அதன் விளைவுகள் இன்று கட்சியை விபரீதமாகப் பாதித்துக் கொண்டிருக்கின்றது என்பதை இன்று சமூக வலைத் தளங்களில் நமது இளைய தலைமுறையினரின் இந்த கட்சி சம்பந்தமான கருத்துக்களைப் பார்க்கும் பொது புரிந்து கொள்ள முடிகின்றது.

இலங்கையின் அரசியல் கட்சிகளின் வரலாற்றை எடுத்து நோக்குவோமாக இருந்தால் எந்த ஒரு கட்ச்சி ஆரம்பிக்கப் படும் பொழுதும் எந்தக் கட்சிக்கும் கொலை அச்சுறுத்தல் இருந்திருக்கவில்லை.இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியான லங்கா சமசமாஜ கட்சி ஆரம்பிக்கப் பட்ட போதும் சரி அதற்குப்பின்னர் உருவான ஐக்கிய தேசியக் கட்சி அதன் பின்னர் உருவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் பின்னர் உருவான ஜேவிபி இப்படி நாம் அனைத்துக் கட்சிகளினதும் தோற்றத்தையும் மற்றும் அதன் பின்னணிகளையும் எடுத்து நோக்கினால் அதன் ஆரம்ப காலத்தில் எந்த ஒரு அரசியல் கட்சிகளும் கொலை அச்சுறுத்தலை எதிர் நோக்கவில்லை .

ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் இயக்கம் முஸ்லிம்களின் மீதான இனப்படுகொலை,காணி ஆக்கிரமிப்பு,சுரண்டல்அத்துமீறல்,ஆக்கிரமிப்பு,கடத்தல்,கப்பம்,புறக்கணிப்பு,அநாதரவான நிலைமை இப்படி முஸ்லிம் மக்களின் மீதான வன்முறை சார் நடத்தைகளின்விளைவாக தோற்றம் பெற்றதால் இவைகளை முஸ்லிம்கள் மீது நடத்திய சக்திகளின் பாரிய அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே இக்கட்சியின் தோற்றம் இடம் பெற்றது.

ஒருபக்கம் போராளிக் குழுக்களின் அச்சுறுத்தல் மறுபக்கம் இதுவரை காலமும் தேசியக் காட்சிகளில் இருந்து கொண்டு முஸ்லிம்களிடையே அரசியலை முன்னெடுத்த உள்ளூர் அரசியல் பிரபலங்களின் எதிர்ப்புக்களும் அவர்களுக்கான அரசின் அனுசரணையும்,இப்படியான ஒரு பல்முனைத் தாக்குதல்களும் நெருக்கடிகளும் நிறைந்த ஒரு சூழ்நிலையில் தான் முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற வருகின்றது.

கிழக்கில் பலம் பெற்ற ஆயுதக்குழுக்களும் அதன் அட்டகாசங்களும் அரசின் மறைமுகமான கெடு பிடிகள்,உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் அடாவடித்தனங்கள் எதிர்ப்புக்கள் இப்படியான சூழ் நிலையில் இந்தக் கட்சியுடன் இணைந்த மக்களை போராளிகள் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது…?

இங்கே நான் இரண்டு வரிகளில் கிழக்கில் பலம் பெற்ற ஆயுதக்குழுக்களும் அதன் அட்டகாசங்களும் அரசின் மறைமுகமான கெடு பிடிகள்,உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் அடாவடித்தனங்கள் எதிர்ப்புக்கள் இப்படி இலகுவாக எழுதிவிட்டேன்…….ஆனால் இந்த வரிகளுக்குள் புதைந்திருக்கும் வலிமிகுந்த வரலாற்றை அறிவீர்களா …?

நமது போராளிகளின் வீரம் மிக்க சாகசங்களை அறிவீர்களா …? இந்த கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டு போராடி உயிரை விட்ட மா பெரும் தியாகிகளைப் பற்றி அறிவீர்களா….? அதிகாரத்துக்கும் அடக்கு முறைக்கும் பணியாது அடலேறு சிம்மமாய் போராடி கட்சி வளர்த்த தியாகச் செம்மல்களை அறிவீர்களா…?

தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட்டு இந்தப் போராட்டத்தில் பல்வேறு வகையில் தனது நேரம்,சொத்து,கல்வி,ஆயுள் இப்படி அர்ப்பணித்த தியாகிகளை அறிவீர்களா…?

ஊன் உறக்கம் பாராது வெயில் மழை பாராது நேரம் காலம் பாராது ஒரு மக்கள் கூட்டத்துக்கு உழைத்த ஒரு மா பெரிய தலைவனையும் அவனுக்குப் பின்னல் எறும்புக் கூட்டம் போல் பயணித்த மா பெரும் போராளிகளையும் தரிசிக்க வேண்டுமா……..?

என்னோடு வாருங்கள்…….

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் வரலாற்றை ஒரு முறை படித்துப் பார்ப்போம்……….

எழுதிப் பார்ப்போம்……..

நடந்து பார்ப்போம்……..

.
நமது இயக்கத்தின் வலி மிகுந்ததும் தியாகம் மிக்கதுமான சோதனைகள் மிக்கதுமான வெற்றி தோல்விகள் குறித்த நமது உன்னத வரலாறு எழுதப் பட வேண்டும்….

நமது படிதாண்டல்களின் பரிமாணங்கள் பொறிக்கப் பட வேண்டும்…..

இது வளரும் தலைமுறையினரால் படிக்கப்படும் போதுதான் நமது இயக்கத்தின் மகிமையையும் முக்கியத்துவையும் விளங்கி இந்த இயக்கத்தைப் பாதுகாக்கின்ற ஒரு பதிய தலைமுறையாக உருவாகுவார்கள் …..என்று நம்புகின்றேன்…..!

14264202_1035188539933373_7031530949632287351_n

adminslmc
By adminslmc November 1, 2016 19:04 Updated
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*